இந்திய வங்கி துறையில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ள HDFC வங்கி ஆனது, தற்போது முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு ஹெச் டி எஃப் சி வங்கி முக்கிய பங்கு வகிக்கும் பங்காகும். இந்த நிலையில் இன்றைய நிலையில் இப்பங்கை வாங்கலாமா வாங்க கூடாதா என்ற பெரிய விவாதமே கிளம்பியுள்ளது. ஒருபுறம் வங்கியின் இணைப்புக்கு பிறகு பெரிய அளவில் வளர்ச்சி காணலாம் என்ற நம்பிக்கை பிறந்தாலும், மறுபுறம் எச்சரிக்கை மணியும் அடித்து வருகிறது.
குறிப்பாக மார்ச் 2026 காலாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இப்பங்கில் சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இதனிடையே இப்பங்கானது மார்ச் காலாண்டில் 26.2% அளவுக்கு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இது மார்ச் 2020-க்கு பிறகு மிக மோசமான வீழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் வங்கி பங்கானது 33% மேலாக சரிவைக் கண்டிருந்தது.

தற்போதைய ஷேர் ஹோல்டிங் பேட்டர்ன் அடிப்படையில் பார்க்கும்போது, அன்னிய முதலீட்டாளர்கள் 3.6% அல்லது 47.95 கோடி பங்குகளை விற்பனை செய்து இருப்பை குறைத்துள்ளனர். அதேசமயம் எஃப்.ஐ.ஐ -களின் எண்ணிக்கையும் 2,757ல் இருந்து 2,528 ஆக சரிவைக் கண்டுள்ளது. இதனிடையே தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டாக அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்கு விகிதத்தை குறைத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 2025 ன் படி, 47.67% ஆக இருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு மார்ச் 2026 முடிவில் 44.05% ஆக குறைந்துள்ளது. அதாவது ஒரே காலாண்டில் 3% மேலாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஒரு மாற்றம் அல்ல. தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் மூன்று காலாண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். இது இப்பங்கின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
எனினும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு குறைந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு விகிதமானது தொடர்ச்சியாக ஐந்தாவது காலாண்டுகளாக முதலீட்டை அதிகரித்துள்ளது. இது டிசம்பர் 2025ல் 26.66%ல் இருந்து 29.54% ஆக பங்கு விகிதத்தை உயர்ந்துள்ளது.
அதாவது சுமார் 28,293 கோடி ரூபாய் மதிப்பிலான 38.67 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர். பிராவிடண்ட் ஃபண்டானது 2,239 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 256 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் வாங்கியுள்ளனர். இந்த காலகட்டத்தில் எல் ஐ சி ஆனது 969 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளது.
மேற்கண்ட பல்வேறு காரணிகள் மத்தியில் இப்பங்கானது சரிவைக் கண்டுள்ளது. கடந்த 2020ல் வங்கியின் உயர்மட்டத் தலைமையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, புதிய நிர்வாகத்தின் கீழ் வங்கி தன்னை தகவமைத்து கொள்ள வேண்டியிருந்தது. கிரெடிட் கார்டு சேவையை ரிசர்வ் வங்கி தற்காலிகமாக நிறுத்தி வைத்ததும், வங்கியின் வளர்ச்சி வேகத்தை சற்று குறைத்தது. ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மெகா இணைப்புக்கு, வங்கியின் லாப வரம்பு மற்றும் கடன் வளர்ச்சி விகிதத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சிறிய தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் பல சவால்கள் இருந்தாலும் வங்கியின் மேலாண்மை தரப்பு மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. சமீபத்தில் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் வங்கியில் இருந்து வெளியேறினாலும், அது வங்கியின் மறுமலர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
குறிப்பாக ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகள், தற்போது குறைந்து வருவது வங்கிக்கு சாதகமான அம்சமாகும். வட்டி விகித உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது, வரும் காலங்களில் வங்கியின் லாபத்தை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக குறுகிய காலத்தில் ஹெச் டி எஃப் சி வங்கி பங்குகள் சரிவுகள் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் வலுவான நிலுவையில் இருக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது ஒரு தற்காலிகமான போக்காக இருக்கலாம். ஆனால் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்ந்து வாங்குவது இந்த வங்கி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதன் வலுவான நிதி நிலை அடிப்படை பங்கிற்கு சாதகமாக அமையலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications
