HDFC வங்கியில் அடுத்தடுத்த அதிர்ச்சி! 3 உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ் - என்ன நடக்கிறது?

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி, தற்போது கடும் நிர்வாக சிக்கல்களை சந்தித்து வருகிறது. வங்கியின் தலைவர் அதானு சக்கரவர்த்தியின் ராஜினாமாவை தொடர்ந்து, இப்போது மேலும் மூன்று உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியின் சில்லறை கிளை வங்கி பிரிவின் குழுத் தலைவர் சம்பத் குமார் உட்பட மூன்று முக்கிய அதிகாரிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் செயல் துணைத் தலைவர் ஹர்ஷ் குப்தா, NRI உள்நாட்டு வணிகம் மற்றும் முதுநிலை துணைத் தலைவர் பாயல் மந்த்யன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

HDFC வங்கியில் அடுத்தடுத்த அதிர்ச்சி! 3 உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ் - என்ன நடக்கிறது?

இந்த பணி நீக்கத்திற்கான காரணம் தவறான விற்பனை (Mis-selling) என்ற சர்ச்சையானது எழுந்துள்ளது. HDFC வங்கியின் சில்லறை கிளை வங்கி பிரிவின் குழுத் தலைவர் சம்பத் குமார் மற்றும் இரண்டு உயர் அதிகாரிகளை, கிரெடிட் சூயிஸ் (Credit Suisse) வங்கியின் கூடுதல் டயர்-1 (AT-1) பத்திரங்களை தவறான முறையில் விற்பனை செய்ததாக கூறப்படும் புகாரில் வங்கி பணி நீக்கம் செய்துள்ளது. இது தனியார் வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, வங்கியின் பங்கு விலையில் ஏற்பட்ட பெரும் சரிவால் இரண்டே நாட்களில் அதன் சந்தை மதிப்பில் 96,000 கோடி ரூபாய் துடைத்து எறியப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய அதிரடி நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

வங்கியின் துபாய் கிளையில் எழுந்த புகார்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டதையடுத்து, 2025 ஜனவரியிலேயே குப்தா மற்றும் மந்த்யான் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை சேர்த்து கூறியுள்ளது.

வங்கியின் துபாய் கிளையில் பணியாற்றிய அதிகாரிகள், இந்தியாவிலிருந்த NRI-களின் வெளிநாட்டு கரன்சி டெபாசிட்டுகளை (FCNR) பஹ்ரைன் கிளைக்கு மாற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இந்த AT-1 பத்திரங்களை வாங்கியவர்கள், பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆவர். வங்கியின் அதிகாரிகள் தங்களை ஏமாற்றி, இந்தியாவில் இருந்த அவர்களது வெளிநாட்டு கரன்சி அல்லாத FCNR டெபாசிட்களை பஹ்ரைனுக்கு மாற்ற செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பஹ்ரைன் கிளையில் இருந்த ஊழியர்கள் தன்னுடைய கையெழுத்தை ஒரு வெற்றுத்தாளில் வாங்கியதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முதலீட்டாளர் கூறியதை CNBC-TV18 மேற்கோள் காட்டியுள்ளது. இது தொடர்பாக ஜனவரி 2025-லேயே விசாரணைகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தி வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான், வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியில் நடந்த சில நடைமுறைகள் தனது தனிப்பட்ட விஷயங்கள் முரணாக இருந்ததாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.அதானுவின் ராஜினாமாவை தொடர்ந்து கேகி மிஸ்திரி இடைக்கால தலைவராக நியமனத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை சந்தை முடிந்த பிறகு இந்த இரு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. எனவே வரும் திங்கட்கிழமை (மார்ச் 23, 2026) பங்குச் சந்தை ஆரம்பிக்கும் போது ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் பெரும் ஏற்ற இறக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+