HDFC வங்கிக்கு RBI கிரீன் சிக்னல் - நிர்மல் பேங்க் கொடுத்த Buy ரேட்டிங்! வாங்கலாமா?

HDFC வங்கியின் தலைவர் திடீரென ராஜினாமா செய்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால் நிலைமையை விரைவில் மாற்றும் விதமாக RBI கேகி மிஸ்திரிக்கு (Keki Mistry) கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.

ஒரு பக்கம் சரிவு, இன்னொரு பக்கம் ரெகுலேட்டரின் சப்போர்ட் என தராசு தட்டி ஆடும் இந்த நேரத்தில், முன்னணி தரகு நிறுவனமான நிர்மல் பேங்க் அதிரடியாக ஒரு Buy ரேட்டிங்கை கொடுத்துள்ளது. 780 ரூபாய் என்ற நிலையில் தத்தளிக்கும் இந்த வங்கிப் பங்கு, மீண்டும் 1,200 ரூபாய் என்ற உச்சத்தை எட்டுமா, இந்த வீழ்ச்சி ஒரு தங்கமான வாய்ப்பா, நிபுணர்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

HDFC வங்கிக்கு RBI கிரீன் சிக்னல் - நிர்மல் பேங்க் கொடுத்த Buy ரேட்டிங்! வாங்கலாமா?

ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாகத்தின் ஏற்பட்டுள்ள இந்த பெரிய மாற்றம், அதாவது மார்ச் 19 அன்று அதானு சக்ரவர்த்தி விலகியதும், இடைக்காலத் தலைவராக கேகி மிஸ்திரி நியமிக்கப்படுள்ளார். இது ஹெச்டிஎஃப்சி வங்கியின் மீதான சலசலப்புகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆர்பிஐ-யின் உடனடி அனுமதியானது வங்கியில் எந்த விதமான குழப்பங்களும் இல்லை என்பதையே காட்டியுள்ளது. மற்ற வங்கிகள் உடன் ஒப்பிடும்போது வங்கியின் சொத்து தரம் மற்றும் மூலதன இருப்பு மிகவும் வலுவாக உள்ளது. குறிப்பாக ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி இணைப்புக்கு பிறகு, அதன் நீண்ட கால வளர்ச்சி சிறப்பாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

Also Read

தொடர்ந்து அதன் டெபாசிட் விகிதமும் சிறப்பாக இருந்து வருவது, அதன் மார்ஜின் வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் தரகு நிறுவனமானது ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இலக்கு விலையை 1,210 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.

அதானு சக்ரவர்த்தியின் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், வங்கியின் செயல்பாடுகள் அல்லது நிர்வாகத்தில் எந்த குறிப்பிட்ட குறைகளையும் அதானு சுட்டிக் காட்டவில்லை. அவரின் ராஜினாமா கடிதத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியில் நான் கவனித்த சில நடைமுறைகள் மற்றும் நிகழ்வுகள் (happenings and practices), என்னுடைய தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுக்கு (values and ethics) முரணாக உள்ளன என கூறியுள்ளார். மேலும் அவர் தனது ராஜினாமாவிற்கு வேறு எந்த காரணத்தையும் கூறவில்லை. இது முதலீட்டாளர்கள் மத்தியில் வங்கியின் நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடக்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

Recommended For You

இதனிடையே தான் வங்கி தரப்பில், இது நிறுவனத்தின் தோல்வி அல்ல, மாறாக சில தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட உறவு முறை சிக்கல்கள் மட்டுமே என்று நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. வங்கியின் உயர் மட்டத்தில் பவர் பாலிடிக்ஸ் நடப்பதாக வந்த செய்திகளை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.

இதற்கிடையில் வங்கியின் நேர்மை மீது எனக்கு துளியும் சந்தேகம் இருந்திருந்தால், 71 வயதான நான் இந்த இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்றிருக்க மாட்டேன் என கேகி மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

வதந்திகளால் பங்குகள் விலையானது குறையும் போது, அடிப்படை வலுவாக உள்ள HDFC போன்ற பங்குகளை வாங்குவது புத்திசாலித்தனம் என்பதே சந்தை வல்லுநர்களின் தற்போதைய கணிப்பாகவும் உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+