இந்திய பங்கு சந்தையானது நடப்பு ஆண்டிலேயே சர்வதேச சந்தைகளுக்கு மத்தியில் கெத்தாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதுவே அன்னிய முதலீட்டாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றது. இந்த போக்கு அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அன்னிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, மத்திய அரசு ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
இது இந்தியாவின் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு மேற்கோண்டு உந்துதலை அளிக்கலாம்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா ஆஸ்திரேலியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை செய்துள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தினால் இரு தரப்பு வணிகமும் மேம்படலாம். குறிப்பாக இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு இது ஊக்கப்படுத்தலாம் எனலாம். இது இந்தியாவின் வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.
தேவை அதிகரிக்கலாம்
இதற்கிடையில் தேவையும் 2023ல் மீண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு ஜவுளி நிறுவனங்களை ஊக்குவிக்கலாம். தற்போது ஜவுளி நிறுவனங்களின் மூலதன செலவினங்களும் குறைந்துள்ளது. இது மேற்கொண்டு ஜவுளி நிறுவனங்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இது நிறுவனங்களின் மார்ஜின் விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது ஜவுளி நிறுவனங்களின் பங்கு விலையிலும் எதிரொலிக்கலாம்.
பரிந்துரை
இதற்கிடையில் எம்கோ குளோபல் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு சில ஜவுளி பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இதில் வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் நிதின் ஸ்பின்னர்ஸ் உள்ளிட்ட சில பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
பி எல் ஐ திட்டம்
மத்திய அரசின் பி எல் ஐ திட்டமும் மேற்கொண்டு ஜவுளி நிறுவனங்களை, உற்பத்தியினை அதிகரிக்க முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இது மேற்கொண்டு வரும் மாதங்களில் இதுவும் ஜவுளி துறைக்கு ஆதரவாக அமையலாம்.
இலக்கு விலை எவ்வளவு?
வர்த்தமான் டெக்ஸ்டைல் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 455 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய நிலையில் இருந்து சுமார் 50% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை 575 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய நிலையில் இருந்து சுமார் 70% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதின் ஸ்பின்னர்ஸ் & ஐடிசி
இதே நிதின் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தில் இலக்கு விலை 310 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதுவும் தற்போதைய நிலையில் இருந்து, 695 ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஐடிசி நிறுவனத்தின் பங்கினையும் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலை 630 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.
கேன் பின் ஹோம்ஸ்
கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தினை வாங்கலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது. இதன் இலக்கு விலையை 630 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இது தற்போதைய விலையில் இருந்து 29% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications