சர்வதேச அரசியல் களத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே வெடித்துள்ள போர் பதற்றம், உலக பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது. குறிப்பாக மார்ச் 2026ல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டி, 120 டாலர் வரை எகிறி நிற்பது சாமானியர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தை கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் வேளையில், ONGC பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் திணறும்போது, ONGC மட்டும் எப்படி லாபத்தில் திளைக்கிறது? போர்க் காலத்திலும் இந்த பங்கு முதலீட்டாளர்களின் பாதுகாப்பான பங்காக மாறியது எப்படி? சந்தை நிபுணர்கள் வியந்து பார்க்கும் முக்கிய காரணங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இந்திய பங்குச் சந்தையில் போர் பதற்றத்துக்கு மத்தியில் பெரும்பாலான எண்ணெய் மற்றும் கேஸ் பங்குகள் சரிவை சந்தித்து வரும் வேளையில், ஓஎன்ஜிசி மட்டும் ஸ்டெடியாக நின்று முதலீட்டாளர்களை ஆறுதல்படுத்தி வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கெயில் இந்தியா உள்ளிட்ட பங்குகள் 22% வரையில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆனால் இந்த சூழலில் ஓஎன்ஜிசி பங்கு மட்டும் 3.50% மட்டுமே சரிவை கண்டுள்ளது. இது இந்த பதற்றமான சூழலில் இப்பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு ஆறுதலான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
நிபுணர்களின் கருத்தின் படி, ஈரான் போரின் மத்தியில் ஹார்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய் வணிகமானது தடைபட்டுள்ளது. இதனிடையே தான் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களை தாண்டி காணப்படுகிறது. இந்தியா தனது மொத்த பயன்பாட்டில் சுமார் 85% எரிபொருளை இறக்குமதி மூலமே ஈடுகட்டுகிறது. ஆக எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தாறுமாறான ஏற்றம் நிறுவனங்களின் செலவை அதிகரிக்கும். இந்த சூழலில் தான் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் அழுத்தத்தில் காணப்படுகிறது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பும் பலவீனமாக காணப்படுகிறது. இதற்கிடையில் மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது, மேலும் ரூபாய் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதுவே பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேற்கொண்டு இந்த பதற்றமான சூழல் அதிகரிக்கலாம் என்ற நிலையில், எண்ணெய் பங்குகள் என்னவாகுமோ என்ற அச்சமும் காணப்படுகிறது. இருப்பினும் வலுவான நிதி கட்டமைப்பையும், அடிப்படையையும் கொண்டுள்ள நிறுவனமான ஓஎன்ஜிசி, மூன்றாவது காலாண்டில் சிறந்து செயல்பாட்டையும் காட்டியுள்ளது. இது பதற்றமான சூழலிலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் இப்பங்கானது 265.55 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கை உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கும் முன்னர் சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications