மும்பை: கடந்த ஓராண்டு காலத்தில் மல்டி பேக்கர் ரிட்டன் தந்த 12 பங்குகள் தற்போது அதன் 52 வார கால உச்சபட்ச மதிப்பிலிருந்து சுமார் 40% வரை சரிவை கண்டுள்ளன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை அவற்றின் சந்தை மூலதனத்துடன் மதிப்பாய்வு செய்து எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் 115 பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 40% வரை சரிவடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இதில் 12 பங்குகள் மல்டி பேக்கர் பங்குகளாக இருந்து தற்போது கணிசமான வீழ்ச்சியை கண்டுள்ளன.

கொச்சின் ஷிப்யார்டு (Cochin Shipyard) நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதன் 52 வார கால உச்சத்தில் இருந்து 54 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. வாரி ரினிவபில் டெக்னாலஜிஸ் (Waree renewable tech) நிறுவனத்தின் பங்கும் 53 சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (GTL infrasturcure), லாஸ்ட் மெயில் என்டர்பிரைசஸ் (last mile enterprises), சன் சைன்ஸ் கேப்பிட்டல்(sunshine capital) ஆகிய நிறுவனங்கள் கடந்த ஓராண்டு காலத்தில் 100 முதல் 200 சதவீதம் வரை லாபத்தை தந்துள்ளன. ஆனால் இந்த ஒரு வார காலத்தில் இவற்றின் பங்கு மதிப்பு அதன் 52 வார உச்சபட்ச மதிப்பில் இருந்து 55 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன.
அதேபோல லோட்டஸ் சாக்லேட் நிறுவனம்(lotus chocolate) கடந்த ஓர் ஆண்டில் 411 சதவீத லாபத்தை தந்திருந்த நிலையில் தற்போது 46 சதவீத சரிவில் இருக்கிறது. டால்பின் ஆஃப் ஸ்ர் (dolphin off shore) நிறுவனத்தின் பங்கு ஓராண்டில் 857 சதவீத லாபத்தை தந்து தற்போது 45 சதவீதம் சரிவில் இருக்கிறது.
பாரத் டைனமிக்ஸ்( bharat dynamics), ஐஎப்சிஐ (ifci),ஹாட்கோ (hudco)உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் 42 சதவீத சரிவில் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக மதிப்பீட்டில் சிக்கிக் கொண்டதாகவும் தற்போது அவற்றில் கரெக்சன் நடப்பதாகவும் முதலீட்டு துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்த பங்குகளின் மதிப்பு மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக மோதிலால் ஓஸ்வால் பைனான்ஸ் நிறுவனம் கூறுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் நிஃப்டி ஸ்மால் கேப் இண்டெக்ஸ் 41% வளர்ச்சியை அடைந்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக நிஃப்டியின் 27 சதவீத வளர்ச்சியை விட அதிகம்.
சந்தையில் தற்போது ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கரெக்சன் நடைபெற்றாலும் பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் தான் இருக்கும் என்கின்றனர் முதலீட்டு துறை சார்ந்தவர்கள்.
ஒரு முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவில் 30 சதவீதம் வரை கரெக்சன் இருப்பதாக தெரிந்தால் அவர்களின் போர்ட்போலியோவை மறுக்கட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் எனக் கூறுகின்றனர்.
தங்களுடைய முதலீட்டை 50 சதவீதம் லார்ஜ் கேப் பங்குகள், 30 சதவீதம் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் 20 சதவீதம் பாண்ட் அல்லது நிலையான வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications