ஷாக் மேல ஷாக்.. Nifty 50-யின் உண்மை முகம்.. நஷ்டத்தில் தவிக்கும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியான விஷயம்!

முதலீட்டு சந்தைக்கு புதிதாக வருவோருக்கு கிடைக்கும் மிக முக்கியமான அட்வைஸ் கண்ணை முடிக்கிட்டு நிஃப்டி50யில் முதலீடு செய்யுங்க என்பது தான், ஆனால் தற்போது நிஃப்டி50-யை பார்க்கும் போது அதிர்ச்சி கலந்த சோகம் தான் கிடைக்கிறது.

நிஃப்டி50 செப்டம்பர் 2024ல் 26277 புள்ளிகளில் இருந்தது, இதுவே இன்று 23,635 புள்ளிகளில் உள்ளது. அப்படியானால் 2 வருடத்தில் நீங்கள் நிஃப்டி 50யில் தொடர்புடைய திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் தற்போது நீங்கள் பெறும் நஷ்டத்தில் இருப்பீர்கள்.

ஷாக் மேல ஷாக்.. Nifty 50-யின் உண்மை முகம்.. நஷ்டத்தில் தவிக்கும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியான விஷயம்!

இதேவேளையில நிஃப்டி மிட்கேப் 150 வரலாற்று உச்சத்தை தொட உள்ளது, நிஃப்டி ஸ்மால்கேப் வரலாற்று உச்சத்திற்கு அருகில் உள்ளது, இதேவேளையில் நிஃப்டி மைக்ரோகேப் 250 அதன் உச்ச அளவில் இருந்து 1 சதவீதத்திற்கும் குறைவான அளவில் உள்ளது. 2026ஆம் ஆண்டில் மிட்கேப் குறியீடு நிஃப்டியை காட்டிலும் 14 சதவீதமும், ஸ்மால்கேப் 20 சதவீதமும் அதிகமாக உள்ளது. ஓரே சந்தை ஆனால் இரு வேறு லாபம்.

பங்குச்சந்தையில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தால் வளர்த்தி பரவலாக்கப்பட்டு உள்ளது, 5-10 வருடத்திற்கு முன்பு சும்மா கல்லை தூக்கிப்போட்டு இருந்தாலும் மாங்காய் விழுந்திருக்ககூடிய சந்தையாக இருந்தது. ஆனால் தற்போது மாங்காயை தேடும் நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

Also Read

ஆனால் கடந்த 6 - 12 மாத காலத்தை பார்க்கும்போது ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் 451%, டீ டெவலப்மென்ட் 234%, இண்டோ டெக் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 139%, ஏரோஃப்ளெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 134%, எம்டிஏஆர் டெக்னாலஜிஸ் 126%, ஷ்னைடர் எலக்ட்ரிக் இன்ஃப்ரா 106%, அபார் இண்டஸ்ட்ரீஸ் 86% ஆகிய நிறுவனங்கள் அதிரடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இது ஒரு பேட்டர்ன் உள்ளது.

அதாவது கேபிள், கண்டெக்டார்ஸ், டிரான்ஸ்பார்மர்ஸ், மின் பரிமாற்றம், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, பாதுகாப்பு துறை மற்றும் விண்வெளி துறை ஆகியவை மட்டுமே அதிக கவனத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது 2-3 துறைகளை நம்பி மொத்த சந்தையும் நகர்கிறது, இதனால் ஒரிரு நிறுவனங்கள் அதிரடியாக உயர்ந்து குறியீட்டு அளவில் வளர்ச்சி அடைந்தாலும், ஒவ்வொரு குறியீட்டிலும் இருக்கும் நிறுவனங்கள் மந்தமான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்து வருகிறது.

இதேவேளையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் நிலையில் நிஃப்டி 50 மந்த நிலைக்குள் நுழைந்துள்ளது.

Recommended For You

FII முதலீட்டாளர்கள் விற்பனை செய்த பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்கள் வாங்கிவிட்டாலும், அவர்கள் மிகவும் முக்கியம். காரணம் FII முதலீட்டாளர்கள் முதலீடு என்பது பல்க் முறையில் பெரியளவில் இருக்கும். இது சந்தையின் இயக்கத்தை மாற்றக்கூடியது, ஆனால் DII முதலீட்டாளர்களால் இத்தகைய தாக்கத்தை உருவாக்க முடியாது.

இதனால் இனி வரும் காலக்கட்டத்தில் ஒரு பங்கில் பணத்தை போட்டுவிட்டு அமைதியாக உட்கார முடியாது. இதன் வளர்ச்சி, டிமாண்ட், FII - DIIகளின் முதலீடுகள் என அனைத்தையும் கவனிக்க வேண்டும், இல்லையெனில் உங்களுடைய முதலீடு உயராமல் குறையவும் கூடும்.

இதனால் இனி வரும் காலக்கட்டத்தில் பங்குச்சந்தை முதலீடுகள் கூடுதல் சிக்கலாகவும், அதிகளவில் டிராக் செய்யக்கூடியதாக இருக்கும். எனவே உஷார்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+