stock market Today updates: இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இன்று காலை தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது.
இன்று கேப் அப் ஆகி தொடங்கிய நிலையில் என் எஸ் இ-யில் தற்போது 4% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கடன் வழங்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மே 2ம் தேதி கூடி நிதிச் சேவை வணிகத்தைப் பிரிப்பது குறித்து முக்கிய முடிவெடுக்க உள்ளனர்.
என்ன காரணம்?
புதியதாக பிரிக்கப்படவுள்ள நிதி நிறுவனத்திற்கு ஜியோ பைனான்ஷியல் சர்வீசஸ் என மறுபெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான முக்கிய அறிவிப்பானது மே 2ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இப்பங்கின் விலையானது இன்று தாறுமாறான ஏற்றத்தினை கண்டு கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 4.45% அதிகரித்து, 2333.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 2343.45 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2254.70 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 4.41% அதிகரித்து, 2333.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2343 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2254.55 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2855 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 2180 ரூபாயாகவும் உள்ளது.
இலக்கு விலை
தொடர்ந்து வலுவான ஏற்றத்தினை கண்டு வரும் ரிலையன்ஸ் பங்கு விலையானது, 225 ரூபாய் ஸ்டாப் லாஸ் வைத்து வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது தரகு நிறுவனம். லார்ஜ் கேப் நிறுவனமான இது 2400 வரையில் மீடியம் டெர்மில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நீண்டகால நோக்கில் 2600 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக விரிவாக்கம்
நீண்டகாலமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமான சின்டெக்ஸ் வணிகத்தினை கையகப்படுத்தியதாக ரிலையன்ஸ் அறிவித்தது. இதுவும் வரவிருக்கும் காலாண்டுகளில் ரிலையன்ஸின் வளர்ச்சியினை தூண்டலாம். இது தவிர தனது சில்லறை வணிகத்தினை விரிவாக்கம் செய்யவும் ரிலையன்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications