4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி! ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை?

கடந்த 13 பிப்ரவரி 2020 அன்று 41,707 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சந்தை, இன்று 18 பிப்ரவரி 2020 மாலை 40,894 புள்ளிகளுக்கு நிறைவடைந்து இருக்கிறது.

ஆக இந்த நான்கு வர்த்தக நாளில் மட்டும் சென்செக்ஸ் சுமாராக 813 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்? என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

அதற்கு முன் கொஞ்சம் சென்செக்ஸின் டெக்னிக்கல் சார்ட் பேட்டன்களையும் பார்த்து விட்டு போவோம்.

சென்செக்ஸ் டெக்னிக்கல்

சென்செக்ஸ் டெக்னிக்கல்

சென்செக்ஸின் 1 நாள் டெக்னிக்கல் சார்ட்டைப் பார்க்கும் போது 41,750 ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸாக உருவாகி இருப்பதாகவே தெரிகிறது. கடந்த டிசம்பர் 20, 2019 அன்று 41, 750 புள்ளிகள் இருந்து தான் சென்செக்ஸ் சரியத் தொடங்கியது. அதே போல டிசம்பர் 20-க்குப் பிறகு சுமார் 4 வர்த்தக நாட்கள் மட்டும் தான் சென்செக்ஸ் 41,750 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு மீண்டும் கடந்த பிப்ரவரி 13, 2020 அன்று41,707 புள்ளிகளைத் தொட்டு சரியத் தொடங்கி இருக்கிறது.

41,750 கடந்து வருமா?

41,750 கடந்து வருமா?

ஆக 41,750 புள்ளிகளைத் தெளிவாகக் கடந்து மேலே வர வேண்டும். அப்போது தான் சென்செக்ஸின் ஏற்றம் உறுதி செய்யப்படும். ஒருவேளை எதிர்பார்த்தது போல ஏற்றம் காணவில்லை என்றால் அதிகபட்சமாக 40,250 புள்ளிகள் வரை சரியக் கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் உஷாராக தங்கள் வர்த்தகங்களை மேற்கொள்ளவும்.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

உலக அளவில் லண்டனின் எஃப் டி எஸ் இ தொடங்கி, ஆசியாவின் நிக்கி வரை பல நாட்டு பங்குச் சந்தைகளும் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே சர்வதேச மற்றும் ஆசிய சந்தைகளின் பிரதிபலிப்பாக இந்திய பங்குச் சந்தைகளும் பெரிய ஏற்றம் காண முடியாமல் தடுமாறி சரிந்து கொண்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல என அனைவரையும் பயமுறுத்தி வைத்திருக்கிறது கொரோனா. இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி என பொருளாதாரத்தின் ஒரு கணிசமான பகுதி செயல்பட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சீனாவின் ஜிடிபி கூட பெரிய அளவில் அடி வாங்கலாம் என்கிறார்கள் சர்வதேச அனலிஸ்டுகள்.

வைரஸ் பயம்

வைரஸ் பயம்

இதனால் இந்தியாவுக்கான வர்த்தகம், ஏற்றுமதி வியாபாரங்கள் கூட சில பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. கடந்த சில வாரங்களில் ஒரு நோய், சுமாராக 1,750 பேரின் உயிரை மாய்த்துவிட்டது, சுமார் 65,000 பேருக்கு நோய் தொற்று இருக்கிறது, மேலும் பரவிக் கொண்டு இருக்கிறது என்றால், உலகமே பதறத் தானே செய்யும்.? அதான் சந்தை தரைதட்டிக் கொண்டிருக்கிறது.

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

கடந்த டிசம்பர் 2019 காலாண்டுக்கான முடிவுகளை சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 74 சதவிகித நிறுவனங்கள் பெரிய வளர்ச்சி இல்லாத அல்லது முந்தைய ஆண்டை விட குறைவான லாபத்தையே ஈட்டி இருக்கிறார்கள். வெறும் 26 சதவிகித கம்பெனிகள் தான் நல்ல லாபம் ஈட்டி இருக்கின்றன. இப்படி இருந்தால் எப்படி சந்தை முன்னேறும்..?

டெலிகாம் அதிரடி

டெலிகாம் அதிரடி

இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு சுமாராக 1.47 லட்சம் கோடி ரூபாயை லைசென்ஸ் கட்டணம், அபராதம், வட்டி எனச் செலுத்த வேண்டி இருக்கிறது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள், இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறார்கள்.

பயம்

பயம்

டெலிகாம் நிறுவனங்கள் நேரடியாக, பணத்தை செலுத்துவது சிரமம், அதையும் மீறி பேங்க் கேரண்டிக்களை எல்லாம் வங்கியில் கொடுத்து பணமாக்கினால் வொடாபோன் ஐடியா திவால் ஆக வேண்டியது தான் என கம்பெனி தரப்பில் இருந்தே வெளிப்படையாகச் சொல்கிறார்கள். இந்த பயமும் சந்தையை நேரடியாக பாதித்துக் கொண்டு இருக்கிறது.

இன்னும் நம் சந்தையை இறக்க என்னவெல்லாம் காத்திருக்கிறதோ தெரியவில்லை.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+