இன்று காலை நிஃப்டி 10 சதவிகித சரிவைக் கண்ட உடன், இந்திய சந்தைகள் இரண்டுமே 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இது கடந்த 12 ஆண்டுகளில் நடக்காத ஒரு சம்பவம் என்பது நினைவு கூறத்தக்கது.
இப்படி சந்தையை நிறுத்த சர்க்யூட் பிரேக்கர் என்கிற வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். அப்படி என்றால் என்ன..? வாருங்கள் பார்ப்போம்.
சர்க்யூட் பிரேக்கர்
ஒரே நாளில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பங்கு அல்லது இண்டெக்ஸ் உயர்ந்தாலோ அல்லது சரிந்தாலோ, அந்த பங்கின் வர்த்தகம் அல்லது ஒட்டு மொத்த இண்டெக்ஸின் வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தப்படும் இதைத் தான் சர்க்யூட் பிரேக்கர் என்கிறோம்.
எத்தனை வகை பிரேக்கர்
இந்திய சந்தைகளில் மொத்தம் 3 வகை சர்க்யூட் பிரேக்கர்கள் இருக்கின்றன.
10 %
15 %
20 %
இந்தியாவில் நிஃப்டி அல்லது சென்செக்ஸ் என எந்த இண்டெக்ஸ் இந்த சர்க்யூட் பிரேக்கர்களைத் தொட்டாலும், வர்த்தகம் நிறுத்தப்படும். இன்று நிஃப்டி தன் சர்க்யூட் பிரேக்கரைத் தொட்ட பின் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10 % சர்க்யூட் பிரேக்கர்
நிஃப்டி அல்லது சென்செக்ஸ் 10 சதவிகிதம் சரிந்தால் மட்டும் போதாது, எந்த நேரத்தில் சரிகிறது என்பதைப் பொறுத்து தான் பங்கு வர்த்தக நேரமும் நிர்ணயிப்பார்கள். எனவே எத்தனை மணிக்குள், எவ்வளவு சதவிகிதம் சரிந்தால், எவ்வளவு நேரம் பங்கு வர்த்தகம் நிறுத்தப்படும் என்கிற விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.
விவரங்கள் 10%
10 % சரிந்தால் - 1 மணிக்கு முன் - 45 நிமிடம் பங்கு வர்த்தகம் ரத்து
10 % சரிந்தால் - 1 மணிக்கு மேல் 2.30 மணிக்குள் - 15 நிமிடம் ரத்து
10 % சரிந்தால் - 2.30 மணிக்கு மேல் - வர்த்தகம் ரத்து கிடையாது
விவரங்கள் 15 % & 20 %
15 % சரிந்தால் - 1 மணிக்கு முன் - 1 மணி 45 நிமிடம் பங்கு வர்த்தகம் ரத்து
15 % சரிந்தால் - 1 மணிக்கு மேல் 2 மணிக்குள் - 45 நிமிடம் ரத்து
15 % சரிந்தால் - 2.00 மணிக்கு மேல் - பாக்கி நாள் முழுக்க வர்த்தகம் ரத்து.
இதை எல்லாம் விட பெரிஹாக, சந்தை ஒரே போடாக 20 % சரிந்தால் - எந்த நேரத்தில் சரிந்தாலும், முழு சந்தை நேரமும் பங்கு வர்த்தகம் ரத்து செய்யப்படும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications