இன்று காலையில் சந்தைகள் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவிலும் சற்று ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 318.05 புள்ளிகள அதிகரித்து, 54,843.98 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 82.10 புள்ளிகள் அதிகரித்து, 16,364.40 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் இன்று சந்தையில் மிகுந்த கவனத்தினை ஈர்த்த பங்குகளில் விஐபி இண்டஸ்ட்ரீஸ் ( VIP Industries) நிறுவனமும் ஒன்று. ஏன் இந்த பங்கு கவனம் ஈர்த்தது? இந்த நிறுவனம் இதன் ஜூன் காலாண்டு அறிக்கை வெளியான நிலையில், அதன் பங்கு விலையானது 19% அதிகரித்து, அதன் 52 வார உச்சமான 459.20 ரூபாயினை தொட்டுள்ளது.
VIP Industries காலாண்டு அறிக்கை
VIP Industries நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் நிகரலாபம், 2.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 51.32 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வருவாய் விகிதமானது ஜூன் காலாண்டில் 206.21 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 40.32 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரம்?
இந்த பங்கின் விலையானது 7.5% அதிகரித்து, 415 ரூபாயாக இன்று தொடங்கியது. இதன் முந்தைய அமர்வில் முடிவு விலையானது 386.10 ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 6,410 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் இருந்து 25% ஏற்றத்திலும், கடந்த 1 ஆண்டில் 67% அதிகரித்துள்ளது.
டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
இந்த பங்கின் விலையானது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாக இருந்து வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
அதோடு கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாடானது, கடந்த ஆண்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக கடுமையாக சரிவினைக் கண்டது. இதன் காரணமாக இதன் பங்கு விலையும் அப்போது சற்று சரிவில் காணப்பட்டது. கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் போக்குவரத்து துறையும் ஒன்று. விஐபி போக்குவரத்து துறையை சார்ந்துள்ள ஒரு நிறுவனமாகும்.
கவனம் செலுத்தி வருகின்றது?
நிறுவனம் பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் வணிகத்தில் ஏற்படுத்தகூடிய மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது அதன் உற்பத்தி ஆலைகள் மற்றும் விநியோக சங்கிலி உட்பட அனைத்தையும் கவனித்து செயல்படுத்தி வருகின்றது
தேவை அதிகரிக்கலாம்
பயணிகள் எண்ணிக்கையானது கடந்த ஆண்டினை காட்டிலும் தற்போது அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டில் 21 லட்சம் பயணிகளாக இருந்த எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 30 லட்சம் பயணிகளாக அதிகரித்துள்ளன. இது அதிகரிக்கும் பட்சத்தில் விஐபி-யின் விற்பனை விகிதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வசம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவின் பங்கு விகிதம் 5.32%ல் இருந்து 2.32% ஆக குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் 52.15 லட்சம் + 22.85 லட்சம் பங்குகள் என இரு கணக்குகள் மூலம் வைத்திருந்த நிலையில், மொத்தம் 75 லட்சம் பங்குகளை வைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications