இந்தியப் பங்குச் சந்தையில் இன்று ஏற்றுமதி என்ற வார்த்தையே முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது. அமெரிக்கா, இந்தியா மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலானது வெளியான நிலையில், சில நிமிடங்களில் ஏற்றுமதியை பெரிதும் சார்ந்திருக்கும் இந்திய நிறுவனங்களின் பங்குகள் சீட்டுக் கட்டுகளை போல சரிந்தன.
குறிப்பாக ஜவுளித்துறையின் ஜாம்பவான் நிறுவனங்களான கோகுல் தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் அவந்தி ஃபீட்ஸ் போன்ற பங்குகள் சுமார் 13% வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த வரி மிரட்டல் ஆனது வெறும் எச்சரிக்கையா அல்லது வர்த்தகப் போரின் ஆரம்பமா என்ற அச்சம் இந்திய சந்தையை சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இந்திய ஏற்றுமதி துறையின் முதுகெலும்பை உடைக்குமா அல்லது இந்த சரிவில் இருந்து பங்குகள் மீளுமா? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

டிரம்பின் மிரட்டல்?
ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகின்றார். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்றாண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனிடையே இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறார். இந்த சூழலில் தான் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்க அனுமதிக்கும் புதிய பொருளாதாரத் தடை மசோதாவுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். இந்த செய்தியானது வெளியான நிலையில் தான் பங்குகள் பலவும் தரை தட்டியுள்ளன.
எந்தெந்த பங்குகள் வீழ்ச்சி?
குறிப்பாக அமெரிக்க சந்தையை அதிகம் நம்பியிருக்கும் ஜவுளி மற்றும் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் மிகப்பெரிய அடியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் சுமார் 13% சரிவைக் கண்டு, 52 வார குறைந்தபட்ச விலையான 597 ரூபாயை எட்டியுள்ளது. இதே இறால் தீவனம் மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள அவந்தி பீட்ஸ் பங்கானது 8.4% சரிவைக் கண்டுள்ளது. ஏபெக்ஸ் ஃபிரோசன் புட்ஸ் பங்கானது சுமார் 8% சரிவையும், பியர்ல் குளோபல் பங்கானது 11% வரையிலும் சரிவைக் கண்டுள்ளது.
ஏன் இந்த திடீர் பதற்றம்?
உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதைத் தடுக்கவே இந்த 500% வரி ஆயுதத்தை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே 50% வரியானது அமலில் உள்ள நிலையில், 500% ஆக உயர்ந்தால் இன்னும் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ளும். குறிப்பாக ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் குறையும்.
மேற்கண்ட கடும் சரிவை சந்தித்துள்ள பங்குகள் பலவும் மொத்த வருவாயில் 50% முதல் 70% அமெரிக்க சந்தையையே சார்ந்துள்ளன. வரி அதிகரித்தால், இந்த நிறுவனங்களின் பொருட்கள் அமெரிக்காவில் விற்க முடியாத அளவிற்கு விலை அதிகரிக்கும் சூழல் ஏற்படலாம். இது விற்பனை குறைய வழிவகுக்கலாம். இந்த நிலையில் தான் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஒரு பேரம் பேசும் உத்தி (Bargaining Chip) என்றும், இந்தியா ரஷ்யாவுடனான எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தால் இந்த வரி விலக்கிக் கொள்ளப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வரவுள்ளதால், அதுவரை ஏற்றுமதி சார்ந்த பங்குகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications