எஸ்பிஐ பங்கு குறித்து நிபுணர்களின் முக்கிய கணிப்பு.. மார்ச் காலாண்டு முடிவையடுத்து நல்ல அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் பொதுத்துறை கடன் வழங்குனரான எஸ்பிஐ, கடந்த வார இறுதியில் தனது மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டது. இதற்கிடையில் எஸ்பிஐ வங்கியானது ஆரம்பத்தில் சரிவினைக் கண்ட நிலையில், தற்போது நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது.

 

இது எஸ்பிஐ வங்கியானது நிகரலாபம் 41% அதிகரித்து, 9,113.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நிபுணர்கள் 9,927.6 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ ஊழியர் செய்த சிறு பிழையால்.. தவறான வங்கி கணக்குகளுக்குச் சென்ற 1.5 கோடி ரூபாய்! எஸ்பிஐ ஊழியர் செய்த சிறு பிழையால்.. தவறான வங்கி கணக்குகளுக்குச் சென்ற 1.5 கோடி ரூபாய்!

வட்டி வருவாயில் எவ்வளவு லாபம்?

வட்டி வருவாயில் எவ்வளவு லாபம்?

லாபம் அதிகரித்திருந்தாலும், ஆரம்பத்தில் பங்கு விலையானது சரிவினைக் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இதன் நிகர லாபமானது வட்டி வருவாய் விகிதமான 31,198 கோடி ரூபாயில் இருந்து, 15.3 சதவீதம் பின்னணியில் நிகர லாப வளர்ச்சி விகிதம் உள்ளது. இது நிபுணர்கள் 31,570 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வட்டி அல்லாத வருமானம்

வட்டி அல்லாத வருமானம்

இதே வட்டி அல்லாத வருமானம் கடந்த ஆண்டினை காட்டிலும் 27 சதவீதம் வலர்ச்சி கண்டுள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 37 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் வட்டி வருவாய் விகிதமானது 1.6% ஆக உள்ளது.

 செலவினை குறைக்க திட்டம்
 

செலவினை குறைக்க திட்டம்

இதே செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டை போலவே உள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 6.4 சதவீதம் வளர்ச்சியினை எட்டியுள்ளது. வங்கியின் செலவினங்கள் அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் வரவிருக்கும் காலாண்டுகளில் செலவினத்தினை குறைக்க திட்டமிட்டுள்ளது என இவ்வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.

நோமுரா?

நோமுரா?

தரகு நிறுவனமான நோமுரா இந்த வங்கி பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 615 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் கடன் செலவினங்கள் அதன் வரலாறு காணாத அளவினை எட்டியுள்ளது. இதற்கிடையில் இதன் நிகர வட்டி மார்ஜின் விகிதமானது மேம்படத் தொடங்கியுள்ளது. இது இனியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரகு நிறுவனங்களின் கணிப்புகள்

தரகு நிறுவனங்களின் கணிப்புகள்

கிரெடிட் சூசி தரகு நிறுவனமும் இப்பங்கின் ஏற்றம் தொடரலாம் என்று கணித்துள்ளது. இதன் இலக்கு விலையினை 600 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையானது 580 ரூபாயில் இருந்து 615 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனமும் இப்பங்கின் இலக்கு விலையை 700 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே மெக்வாரி தரகு நிறுவனம் 665 ரூபாயாக இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது.

தற்போதைய பங்கு விலை

தற்போதைய பங்கு விலை


இதற்கிடையில் இப்பங்கின் விலையானது தற்போது என் எஸி-யில் 2.47% அதிகரித்து, 455.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 461.50 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 438.85 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 549 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 359.55 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 2.42% அதிகரித்து, 455.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

will SBI share go up? how performed in q4 results?

Following the release of SBI Quarterly results, various brokerages are also looking to buy the bank's stake.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X