டெல்லி: மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு மீண்டும் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டிருப்பதால் , தரகு நிறுவனங்கள் 2028 ஆம் ஆண்டுக்குள் மும்பை பங்குச்சந்தை குறுயீட்டு எண்ணான சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளை எட்ட கூடும் என கணித்துள்ளன.
நிர்மலா சீதாராமன் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி முதன்முறையாக மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39,700 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

இந்த ஐந்து ஆண்டுகள் காலத்தில் கிட்டத்தட்ட சென்செக்ஸ் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்து 77,000 புள்ளிகளில் வந்து நிற்கிறது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் 2028 ஆம் ஆண்டுக்குள் சென்செக்ஸ் 1 லட்சம் என்ற மைல் கல்லை எட்டும் என்று ஆனந்த்ரதி மற்றும் மார்க்கெட் குரு ராம்தியோ அக்ரவால் ஆகியோர் கணிப்பு வெளியிட்டனர்.
குறிப்பாக மார்க்கெட் குரு ராம்தியோ அக்ரவால் 2029ஆம் ஆண்டில் சென்செக்ஸ் 1.5 லட்சம் புள்ளிகளை கூட எட்ட கூடும் எனக் கூறியுள்ளார். தற்போது இருப்பதைப் போன்றே சென்செக்ஸ் ஆண்டுக்கு 15 சதவீதம் என்ற காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடையும் பட்சத்தில் இது சாத்தியம் என தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் நிதி அமைச்சராக பதவி வகித்த முதல் ஐந்து ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தை பல்வேறு சாதனைகளை படைத்தது. குறிப்பாக 5 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மூலதனம் என்ற மைல்கல்லை எட்டியது.
அதேபோல இந்தியாவில் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 15 கோடி என்ற புதிய சாதனையை படைத்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திடீரென பங்குகளை விற்பனை செய்யும் பட்சத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் அவற்றை ஈடு செய்யும் வகையில் வாங்கும் திறன் கொண்டவர்களாக மாறி இருக்கிறார்கள்.
நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தான் இதற்கு முன்பு அறிவித்த திட்டங்களை தொடர்வார் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் பிறந்துள்ளதாக நோமுரா தரகு நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பாரதிய ஜனதா கூட்டணி தயவுடன் ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில் ஏற்கனவே இருக்கக்கூடிய கொள்கைகள் தொடருமா என்ற ஒரு குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் நீடித்தது .
ஆனால் தற்போது அமைச்சரவை இலாக்காக்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் கொள்கைகள் , திட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவை நோக்கி வந்து முதலீடுகளை செய்வார்கள் என நோமுரா நிறுவனம் கூறியுள்ளது.
இதேபோல பல்வேறு தரகு நிறுவனங்களும் பாசிட்டிவான ஒரு பார்வையை அளித்துள்ளன. தற்போதைய சூழலில் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது அடுத்த மாதம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யக்கூடிய பட்ஜெட். அதில் அவர் வெளியிடக்கூடிய அறிவிப்புகள் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Story Written by: Devika
More From GoodReturns

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications