LG IPO: கேப்பில் கெடா வெட்டிய வின்ரோ நிறுவனம்.. ஒரே நாளில் ரூ.2.15 கோடி லாபம்..!

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெற்றிகரமாக முடிந்த நிலையில் நேற்று இந்திய பங்குச் சந்தையில் 50% பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டு, முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியது. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.1140-ஐ விட அதிகமாக, பிஎஸ்இ-யில் ரூ.1715 ஆகவும், என்எஸ்இ-யில் ரூ.1710 ஆகவும் இன்று காலை பட்டியலிடப்பட்டது.

நேற்றைய வர்த்தக முடிவில் ஐபிஓ விலையிலிருந்து 48.19% உயர்வுடன் பிஎஸ்இ-யில் ரூ.1689.40 ஆக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றைய செயல்பாடு குறித்து மக்கள் பெரும் ஆர்வத்தை கொண்டுள்ளனர். இதற்கிடையில் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ மூலம் ஒரு சிறிய நிறுவனம் பெரும் லாபத்தை பார்த்துள்ளது.

LG IPO: கேப்பில் கெடா வெட்டிய வின்ரோ நிறுவனம்.. ஒரே நாளில் ரூ.2.15 கோடி லாபம்..!

வின்ரோ கமர்ஷியல் இந்தியா நிறுவனம் பங்குச் சந்தையில் நேற்று எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் ஐபிஓ-வில் பெரும் லாபம் ஈட்டியுள்ளது. இந்த நிறுவனம் ஒரே நாளில் ரூ.2.15 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது எத்தனை பேருக்கு தெரியும்..?

வெறும் ரூ.30.26 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட இந்த ஸ்மால்கேப் நிறுவனம், எல்ஜி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே தனது ரூ.4.27 கோடி ஐபிஓ முதலீட்டை ரூ.6.42 கோடியாக மாற்றியுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சுமார் 37,482 பங்குகளை வின்ரோ கமர்ஷியல் பெற்றது.

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் ஒரு பங்கிற்கு ரூ.1,715 என்ற விலையில் பிரமாண்டமாகத் தொடங்கிய நிலையில் 2.15 கோடி ரூபாய் லாபத்தை ஓரே நாளில் பெற்றுள்ளது. ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.1,140 ஐ விட ரூ.575 அதிகம், அதாவது 50.4% பிரீமியம் விலையாகும்.

சுவாரஸ்யமாக வின்ரோ கமர்ஷியல் நிறுவனத்திற்கும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமான (NBFC) வின்ரோ, அக்டோபர் 9 அன்று ஒரு ஒழுங்குமுறைத் தாக்கலில், ஐபிஓவில் ஒரு நிதி முதலீட்டாளராகப் பங்கேற்பதாகத் தெரிவித்தது. அந்த அறிக்கையின் படி வின்ரோ மொத்தம் ரூ.748 கோடிக்கு ஏலம் கோரியுள்ளது. மொத்த முதலீட்டுக்கும் பங்குகளை பெற்று இருந்தால் சுமார் 65.65 லட்சம் எல்ஜி பங்குகளை வாங்கியிருக்க கூடும்.

மேலும் வின்ரோ கமர்சியல் நிறுவனத்தின் சொந்த பணம் அல்ல, மாறாக முழுக்க முழுக்க 'லீவரேஜிங்' மூலம் செய்யப்பட்ட முதலீடாகும். இது தனிப்பட்ட மற்றும் நிறுவன முதலீட்டாளர்களால் நிதிச் சந்தைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும்.

லீவரேஜிங் என்பது வருமானத்தைப் பெருக்குவதற்காக கடன் நிதியைப் பயன்படுத்துவதாகும். முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த மூலதனத்தை மட்டும் முதலீடு செய்வதற்குப் பதிலாக, இத்தகைய ஐபிஓ-வல் அதிகப்படியான பங்குகளை பெறுவதற்காக கூடுதல் பணத்தைக் கடனாகப் பெறுவார்கள். இப்படி சேர்க்கப்பட்ட பணத்தை தான் வின்ரோ, எல்ஜி ஐபிஓ-வில் பயன்படுத்தியது.

இத்தகைய முதலீடுகள் பங்குகள், ரியல் எஸ்டேட் அல்லது டெரிவேடிவ்களிலும் செய்யலாம். கடனின் செலவை விட லாபம் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகைய முதலீடுகள் செய்யப்படுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+