இந்திய பங்கு சந்தைகள் கடந்த சில தினங்களாக எதிர்பாராத அளவில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றது.
தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 115.66 புள்ளிகள் அதிகரித்து, 51,133.18 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையில் 46.90 புள்ளிகள் அதிகரித்து, 15,348.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதற்கிடையில் நிஃப்டி ஐடி குறியீடு 1.47% ஏற்றத்திலும், பிஎஸ்இ டெக் குறியீடு 1% ஏற்றத்திலும் காணப்படுகிறது.
ஐடி பங்குகள் ஏற்றம்
குறிப்பாக விப்ரோ 2.04% ஏற்றத்திலும், மைண்ட்ட்ரீ 5.05% ஏற்றத்திலும், டிசிஎஸ் 1.61% ஏற்றத்திலும், இன்ஃபோசிஸ் 0.70%, எல்&டி இன்ஃபோடெக் 2.35% ஏற்றத்திலும், எம்பாஸிஸ் 3.04% ஏற்றத்திலும், டெக் மகேந்திரா 1.21% ஏற்றத்திலும், ஹெச் சி எல் டெக் சற்றே ஏற்றம் கண்டும் காணப்படுகின்றன.
வரலாற்று உச்சத்தில் மைண்ட்ட்ரீ
மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் பங்கு விலையானது 5% அதிகரித்து 2,316.35 ரூபாயாக வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. இது இந்த நிறுவனம் 4X4X4 என்ற ஸ்டேட்டர்ஜி வலியுறுத்திய பின்னர் தான் இந்த ஏற்றத்தினை கண்டுள்ளது. இது நான்கு தொழிற்துறை குழுக்கள், நான்கு சேவை கோடுகள், நான்கு புவியியல் மையங்களை வலியுறுத்துகின்றது.
புதிய ஒப்பந்தங்கள்
இது தவிர இந்த நிறுவனத்தின் ஆய்வாளர் தினத்தில் வருவாய் குறித்த நல்ல வளர்ச்சி விகிதம், லாபம் குறித்த நம்பிக்கையும் காட்டியது. இதுவும் இதன் ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம். இது குறித்து புரோக்கிங் நிறுவனம், புதிய ஒப்பந்தங்கள் கையெப்பம், மார்ஜின் விரிவாக்கம் போன்ற சாதகமான காரணிகளை கூறியுள்ளது. ஆக இதுவும் இப்பங்கிற்கு சாதகமாக அமைந்துள்ளது.
டிசிஎஸ் பங்கு விலை
டிசிஎஸ் பங்கு விலையானது 2% அதிகரித்து, 3,218 ரூபாயாக பிஎஸ்இ-யில் அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது ஐந்தாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இது வரையில் 5% உயர்ந்துள்ள நிலையில், இந்திய சந்தை குறியீடுகள் இதே நேரத்தில் 3% உயர்ந்துள்ளன. டிசிஎஸ் நிறுவனம் வரவிருக்கும் காலாண்டுகளில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. புதிய டெக்னாலஜிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான ஒரு நிறுவனமாக மாறி வருகின்றது.
விப்ரோ உச்சம் தொட காரணம் என்ன?
விப்ரோ நிறுவனம் தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டாக வலுவான வளர்ச்சியினை எதிர்பார்க்கிறது. குறிப்பாக வலுவான நிலையான நாணய வருவாயினை எதிர்பார்க்கிறது. அதோடு பல புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளது. மார்ஜின் தொகையும் விரிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. தற்போது இதன் பங்கு விலை 2% அதிகரித்து 537 ரூபாயாக காணப்படுகிறது.
ஐடி பங்குகள் ஏற்றம்
மேற்கண்ட நிறுவனங்கள் மட்டும் அல்லாது, இந்த கொரோனாவின் நெருக்கடிக்கும் மத்தியில் இன்று, வழக்கம்போல இயங்கி வரும் துறைகளில் ஐடி துறையும் ஒன்று. அதோடு பல துறைகளிலும் ஐடி தேவையானது அதிகரித்துள்ளது. பல துறைகளிலும் டிஜிட்டல் வளர்ச்சியினை மேம்படுத்த நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
அதிகரித்து வரும் தேவை
இதனால் ஐடி துறையின் தேவையான அதிகரித்து வருகின்றது. இதனால் ஐடி நிறுவனங்கள் பல புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளன. வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஐடி பங்குகளும் இதனால் ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக தற்போது கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளுக்கும் மத்தியிலும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். ஆக இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications