ஐடி ஊழியர்களையும், முதலீட்டாளர்களையும் அலறவிட்ட Wipro.. வெறும் 1 சதவீத உயர்வு..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஒன்றான விப்ரோ தனது ஜூன் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது, சந்தை கணிப்புகளின் படியே மிகவும் மந்தமான லாப வளர்ச்சியை பதிவு செய்து முதலீட்டாளர்களும், இந்நிறுவன ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் விப்ரோ 3352 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பதிவு செய்துள்ளது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவு செய்த 3330 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடுகையில் வெறும் 1 சதவீதம் அளவிலான லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஐடி ஊழியர்களையும், முதலீட்டாளர்களையும் அலறவிட்ட Wipro.. வெறும் 1 சதவீத உயர்வு..!

வருவாய் அடிப்படையில் பார்க்கும் போது முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் 11 சதவீத உயர்வுடன் 24,479 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்றுள்ளது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 22,135 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டிலும் மிகவும் மந்தமான வருவாய் வளர்ச்சி மட்டுமே இருக்கும் என கணித்துள்ளது விப்ரோ, அதன் அடிப்படையில் செப்டம்பர் காலாம்டில் வருவாய் 1.5 சதவீதமும், நிலையான நாணய மதிப்பில் 0.5 சதவீதம் வரையிலான வருவாய் மட்டுமே இருக்கும் என முன்கூட்டியே முதலீட்டாளர்களை தயார்ப்படுத்தியுள்ளது விப்ரோ.

ஜூன் காலாண்டின் மோசமான லாப, வருவாய் அளவுகளை சமாளிக்கும் வகையில் விப்ரோ தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு தலா ஒரு பங்கிற்கு 2 ரூபாய் ஈவுத்தொகை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் ஐடி சேவை பிரிவு 2.61 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது, இது காலாண்டு அடிப்படையில் 1.4 சதவீதம் குறைவாகவும், வருடாந்திர அடிப்படையில் 1 சதவீதம் அதிகமாகவும் பதிவு செய்துள்ளது. இதைபோல் ஐடி சேவை பிரிவின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 16 சதவீதமாக உள்ளது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 1.3 சதவீதம் குறைவு, கடந்த ஆண்டு ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 1.2 சதவீதம் குறைவு.

இக்காலாண்டு முடிவில் விப்ரோ நிறுவனத்தின் பலம் இந்த ஒரு விஷயத்தில் தான் காட்டியுள்ளது, இந்நிறுவனத்தின் மொத்த ஆர்டர் புக்கிங் அளவு 3.37 பில்லியன் டாலராகும்.

இக்காலாண்டு முடிவின் போது விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ பேசுகையில், தற்போது உலகளாவிய வாடிக்கையாளர்கள் வெறுமனே தொழில்நுட்ப மேம்பாடு காட்டிலும், அதிகளவில் ஏஐ அடிப்படையிலான ஆப்ரேட்டிங் மாடலை விரும்புகின்றனர் என தெரிவித்தார். இதன் மூலம் உலகளவில் ஐடி சேவை துறை ஏஐ அடிப்படையிலான சேவைக்கு மாற திட்டமிட்டு உள்ளது.

விப்ரோ பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 1.75 சதவீதம் உயர்ந்து 177.70 ரூபாய்க்கு முடிந்துள்ளது. ஆனால் 2026ல் இதுவரையில் சுமார் 33.53 சதவீதம் வரையில் விப்ரோ சரிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+