இந்தியாவின் 3வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ, செப்டம்பர் காலாண்டில் 5.5 சதவீத லாப உயர்வுடன் சுமார் 2,191.7 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது. இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த செலவுகள் குறைப்பு, குறைந்த நிதி செலவுகள் மற்றும் அதிகப்படியான வருமானங்கள் மூலம் செப்டம்பர் காலாண்டில் கூடுதல் வருமானத்தைப் பெற்றுள்ளது விப்ரோ.
ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் 2,076.5 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமானம்
ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் இக்காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருமானத்தின் அளவு 1.4 சதவீதம் குறைந்து 13,468.9 கோடி ரூபாயாக உள்ளது. இக்காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஐடி பிராடெக்ட் வர்த்தகம் 50 சதவீதம் வரை சரிந்துள்ளது.
ஐடி சேவை
ஆதேபோல் இக்காலகட்டத்தில் ஐடி சேவை வர்த்தகத்தின் அளவு 1.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வில் பிஎப்எஸ்ஐ பெரிய அளவில் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹெல்த்கேர் மற்றும் லைப் சையின்ஸ் வர்த்தகத்தில் வழக்கத்தை விடவும் குறைவான வருமானத்தை மட்டுமே பெற்றுள்ளது.
டாலர் வருவாய்
இது மூலம் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் டாலர் வருவாய் 2 சதவீதம் வரை உயர்ந்து 2054 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள்
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் 50 மில்லியன் டாலர் கீழ் 3, 10 மில்லியன் டாலர் கீழ் 7, 5 மில்லியன் டாலர் கீழ் 8, 3 மில்லியன் டாலர் கீழ் 13, 1 மில்லியன் டாலர் அளவீட்டில் 3 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் இக்காலாண்டில் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1,274 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications