இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் அடுத்தடுத்து காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் வேளையில் விப்ரோ நிறுவனம் இன்று 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வெளியிட்டது. எதிர்பார்க்கப்பட்டது போல் மற்ற ஐடி நிறுவனங்களை போலவே விப்ரோ நிறுவனத்தின் லாப அளவீடுகள் குறைந்துள்ளது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் வருடாந்திர 7% குறைந்து ரூ.3,119 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.3,354 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. விப்ரோவின் லாப அளவுகள் குறைந்தாலும் செயல்பாட்டு வருவாய் 6% உயர்ந்து ரூ.23,556 கோடியை எட்டியது.

மேலும் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் (labour codes) மூலம் மற்ற ஐடி நிறுவனங்களின் லாப அளவீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் விப்ரோ லாப அளவீடும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்த தாக்கத்தை நீக்கினால் விப்ரோ-வின் நிகர லாபம் ரூ.3,360 கோடியாக இருந்து உள்ளது. இது காலாண்டுக்கு காலாண்டு 3.6% உயர்வையும், வருடாந்திர 0.3% சிறு வளர்ச்சியையும் பதிவு செய்கிறது.
விப்ரோவின் கோர் ஐடி சேவைகள் பிரிவு வருவாய் 2,635 மில்லியன் டாலராக உள்ளது. இது காலாண்டு அடிப்படையில் 1.2% உயர்வு, வருடாந்திர அடிப்படையில் 0.2% அளவிலான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. மேலும் நிலையான நாணய அடிப்படையில் காலாண்டு அடிப்படையில் 1.4% உயர்வு, வருடாந்திர அளவில் 1.2% குறைந்து காணப்படுகிறது.
டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் புதிய வர்த்தக செயல்பாடுகள் மெதுவாக இருந்து வருகிறது. இர்காலாண்டில் மொத்த புக் செய்யப்பட்ட ஒப்பந்த மதிப்பு 3.3 பில்லியன் டாலராக இருந்து வருகிறது, நிலையான நாணய அடிப்படையில் வருடாந்திர அடிப்படையில் 5.7% குறைவு.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகம் இடைக்கால டிவிடெண்ட் ஆக ஒரு பங்கிற்கு ரூ.6 அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 27 தேதியை ரெக்கார்ட் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பிப்ரவரி 14 அல்லது அதற்கு முன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
TCS, HCL, இன்போசிஸ் உடன் ஒப்பீடு
ஐடி துறையின் மற்ற நிறுவனங்களின் Q3 முடிவுகளை ஒப்பிடுகையில், விப்ரோவின் செயல்பாடு மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சற்று பின்தங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications