நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று விப்ரோ. இந்நிறுவனம் சமீபகாலமாக புதிய ஒப்பந்தங்களை பெற கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு கைமேல் பலனும் கிடைக்க தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமான பீனிகஸ் குழுமத்திடம் இருந்து 50 கோடி யூரோ மதிப்பிலான மூலோபாய ஒப்பந்தத்தைபெற்றுள்ளது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்கீழ், விப்ரோவின் எஃப்சிஏ ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமான விப்ரோ பைனான்சியல் அவுட்சோர்சிங் சர்வீசஸ் லிமிடெட் பீனிக்ஸ் குழுமத்தின் ரீஅஷ்யூர் வாடிக்கையாளர்களுக்கு விரிவான ஆயுள் மற்றும் ஓய்வூதிய நிர்வாக சேவைகளை வழங்கும்.

இந்த சேவைகள் கொள்கை நிர்வாகம், உரிமை கோரல் செயலாக்கம், வாடிக்கையாளர் சேவை ஆதரவு, தரவு மேலாண்மை மற்றும் அறிக்கையிடல்,இணக்கம் மற்றும் ஒழுங்குமுறை ஆதரவு அத்துடன் பிளாட்.பார்ம் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் பெற்ற தகவலை நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு விப்ரோ அறிவித்தது. இதனையடுத்து இந்த செய்தியின் தாக்கம் வியாழக்கிழமை (இன்று) வர்த்தகத்தில் விப்ரோ பங்கின் விலையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்தது போலவே, நேற்றைய அறிவிப்பு இன்றைய பங்கு வர்த்தகத்தில் விப்ரோ பங்கின் விலையில் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் விப்ரோவின் பங்கு விலை ஏற்றத்துடனே தொடங்கியது. வர்த்தகத்தின் முடிவில் விப்ரோ பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.80 சதவீதம் உயர்ந்து ரூ.272.05ஆக இருந்தது. தற்போது இப்பங்கு அதன் 52 வார உச்ச விலையை காட்டிலும் 16 சதவீதம் குறைவாக உள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே விப்ரோ நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.324.55ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
நிதி சேவை நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் கூறுகையில், டிசிஎஸ்-க்கு வலுவானதாக இரு ஒரு பிரிவில் விப்ரோ நுழைவதைக் குறிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு காலாண்டுகளில் விப்ரோ நிறுவனத்துக்கு கிடைத்த 2வது மெகா ஒப்பந்தம் இதுவாகும். தற்போதைய தலைமையின்கிழ் ஜிடிஎம் மற்றும் பெரிய ஒப்பந்த கவனம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இது எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது. அதேசமயம், விப்ரோ கடந்த காலங்களில் பல தவறான தொடக்கங்களை கொண்டுள்ளது. மேலும் திருப்புமுனை முயற்சிகளுக்கு நம்பகத்தன்மையை வழங்க இது போன்ற வெற்றிகள் இன்னும் தேவைப்படும். விப்ரோ தொடர்ந்து புதிய ஒப்பந்தங்களை கைப்பற்றினால், நிறுவனம் வேகமாக மறுமலர்ச்சி கண்டு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications