முட்டி மோதும் விப்ரோ.. இனி வரும் நாட்களில் எப்படியிருக்கும்.. நிபுணர்கள் கணிப்பு என்ன?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நடப்பு ஆண்டில் 45% சரிவினைக் கண்டுள்ளது.

நடப்பு ஆண்டில் ஐடி துறை பங்குகள் பெரும்பாலும் பெரும் சரிவினைக் கண்ட நிலையில், குறிப்பாக விப்ரோ பங்கின் விலையானது மிக மோசமான சரிவினைக் கண்டு டாப் லூசராக உள்ளது.

கடந்த டிசம்பர் 31, 2021ல் 715.20 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, கடந்த அமர்வில் 396 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இந்த அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளதே வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

இன்ஃபோசிஸ் பங்கு விலையானது 18% சரிவிலும், டிசிஎஸ் பங்கு விலையானது 11.71% சரிவிலும் காணப்படுகின்றது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 5.37% ஏற்றம் அல்லது 3178 புள்ளிகள் ஏற்றம் கண்டும் காணப்படுகின்றது. இதே நிஃப்டி 5.28% அல்லது 930 புள்ளிகள் ஏற்றம் கண்டும் முடிவடைந்துள்ளது.

ஐடி இன்டெக்ஸ்  சரிவு

ஐடி இன்டெக்ஸ் சரிவு

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்தில் இருந்தாலும், ஐடி இன்டெக்ஸ்கள் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக பி எஸ் இ ஐடி இன்டெக்ஸ் ஆனது, 22.15% அல்லது 8383 புள்ளிகள் அதிகரித்து, 29,461 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஒரே ஆண்டில் டாலர் மதிப்பானது 16.60% அல்லது 5863 புள்ளிகளை இழந்துள்ளது.

விப்ரோ பங்கு

விப்ரோ பங்கு

நடப்பு ஆண்டில் இதுவரையில் நிஃப்டி ஐடி குறியீடானது தொடர்ந்து 24.14% அல்லது 9343 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 18.43% அல்லது 6623 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது.

இதே விப்ரோ பங்கின் விலையானது அக்டோபர் 17,2022 52 வார சரிவான 372.40 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 24 ரூபாய் அல்லது 6.6% ஏற்றம் கண்டுள்ளது.

இலக்கு எவ்வளவு?

இலக்கு எவ்வளவு?

2.17 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பினை கொண்டுள்ள நிலையில்,. கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலையானது 38.31% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் விப்ரோ பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் எனவும், இதன் இலக்கு விலை 425 ரூபாய் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 தற்போதைய பங்கு நிலவரம்?

தற்போதைய பங்கு நிலவரம்?


கடந்த அமர்வில் என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.39% குறைந்து, 394.05 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. கடந்த அமர்வில் இதன் உச்ச விலை 406 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 391.25 ரூபாயாகவும் இருந்தது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 2.39% குறைந்து, 394.05 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் கடந்த அமர்வின் உச்ச விலை 406 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 391.35 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை726.70 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 372.40 ரூபாயாகவும் உள்ளது.

எதிர்பார்ப்பு?

எதிர்பார்ப்பு?

கடந்த சில காலாண்டுகளாகவே விப்ரோ நிறுவனத்தின் வருவாய் விகிதமானது எதிர்பார்ப்பினை குறைந்திருந்தாலும், இது இனி வரவிருக்கும் காலாண்டுகளில் மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நோமுரா இந்த பங்கினை நியூட்ரலுக்கு மாற்றம் செய்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தினையும் நியூட்ரலுக்கு மாற்றம் செய்துள்ளது.

நிபுணர்கள் கணிப்பு

நிபுணர்கள் கணிப்பு

இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ரெசசன் அச்சத்தில் தேவையானது சரியலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் முக்கிய லெவல் 406 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. இது வரவிருக்கும் நாட்களில் 40 6 - 416 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என்றாலும்380 - 385 ரூபாய்க்கு கீழாக முடிவடையாமல் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+