நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ லிமிடெட், சமீபத்திய காலமாக மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக மூன்லைட்டிங் விவகாரத்தில் 300 பேரை பணி நீக்கம் செய்தது பெரும் அதிருப்தி அளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது 6% மேலாக சரிந்து, 52 வார குறைந்தபட்ச விலையினை எட்டியுள்ளது.
இன்று காலை அமர்வில் பெரும் சரிவினைக் கண்டு, 383 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது செப்டம்பர் காலாண்டு முடிவு வெளியான பிறகு சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.
நிகரலாபம்
விப்ரோ நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் 9% மேலாக சரிவினைக் கண்டு, 2659 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஊழியர்களுக்கான செலவுகள் மற்றும் அமெரிக்க வருவாய் குறைந்துள்ள நிலையில் லாபம் குறைந்துள்ளது.
பெங்களூர் அடிப்படையிலான செயல்பாட்டு வருவாய் விகிதம் 14.6% அதிகரித்து, 22,539 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 19,667 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் காலாண்டு நிலவரம்
விப்ரோவின் டிசம்பர் காலாண்டில் ஐடி சேவை வணிகமானது 2811 - 2853 மில்லியன் டாலராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 2023 மற்றும் 2024ல் வளர்ச்சி விகிதமானது சற்றே குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கு விலை
இந்த நிறுவனத்தின் பங்கு இலக்கு விலை 380 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த சவாலான நிலை வளர்ச்சி போராட்டங்களின் மத்தியில், இந்த பங்கு விலை ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது காலாண்டில் விப்ரோவின் மார்ஜின் விகிதமானது மெதுவான விகிதத்தில் உள்ளது. மூன்றாவது காலாண்டிலும் மார்ஜினில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி காணலாம்
கடந்த 8 காலாண்டுகளாகவே விப்ரோவின் மார்ஜின் விகிதமானது 600 bps சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த சில காலாண்டில் விப்ரோ சில கையகப்படுத்தல்களையும் செய்தது. இது கணிசமான நிதியினை எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இது இனி வரவிருக்கும் காலாண்டுகளில் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications