23% சரிந்த நிஃப்டி ஐடி! முதலீட்டாளர்களுக்கு இது ஆபத்தா அல்லது சூப்பரான வாய்ப்பா?

நிஃப்டி ஐடி (Nifty IT) குறியீடு இந்த ஆண்டில் இதுவரை 23% வீழ்ச்சியை சந்தித்துள்ளது, இது பல முதலீட்டாளர்களை குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சரிவு ஒரு ஆபத்தான அறிகுறியா அல்லது தரமான பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்க கிடைத்த ஒரு அரிய வாய்ப்பா என்ற கேள்வியானது முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஐடி துறையின் எதிர்காலம் இனி என்னவாகுமோ? என்ற அச்சத்தின் மத்தியில், பங்குச் சந்தையில் ஐடி பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டு கொண்டுள்ளன. இதன் காரணமாக நிஃப்டி ஐடி குறியீடானது 23% மேல் கடும் சரிவை கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் மீது விழுந்த அடி. ஏஐ தொழில்நுட்பம், மனித உழைப்பை குறைத்து, ஐடி நிறுவனங்களின் லாபத்தை உறிஞ்சி விடுமோ என்ற அச்சம் சந்தையில் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், சந்தையின் இத்தகைய பதற்றமான நேரங்களே புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களுக்கு பொற்காலமாக மாறியிருக்கிறது.

23% சரிந்த நிஃப்டி ஐடி! முதலீட்டாளர்களுக்கு இது ஆபத்தா அல்லது சூப்பரான வாய்ப்பா?

இருப்பினும் தற்போது பல எதிர்மறையான செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன. ஆனால் அதற்கான எதிரொலியும் சந்தையில் ஏற்கனவே பிரதிபலித்து விட்டது. ஆனால் தொழில் நுட்பமானது சர்வதேச நாடுகளிடையே மிக வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஆனால் இந்த சூழலில் பல லார்ஜ் கேப் ஐடி துறை சார்ந்த பங்குகள் அதன் 10 வருட சராசரி பிஇ-க்கு கீழாகவே காணப்படுகின்றது. ஆக தற்காலிகமாக சந்தையை பதம் பார்த்துக் கொண்டிருக்கும் காரணிகளை விடுத்து, முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் லாபம் கொடுக்க கூடிய காரணிகளாக பார்க்க வேண்டும். இந்த சூழலில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. டெக் மஹிந்திரா பங்கும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் தான். இருப்பினும் விப்ரோ பங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறும் நிபுணர்கள், அதன் செயல்பாடுகள் மந்த நிலையில் காணப்படுகிறது. ஆக இப்பங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

Also Read

சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படும் இந்த சூழலில், மிட் கேப் பங்குகளை விட லார்ஜ் கேப் பங்குகள் பாதுகாப்பானவை. நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சந்தையில் நிலைத்து நிற்கின்றன. இவை நிச்சயமற்ற காலங்களில் சிறு நிறுவனங்களைக் காட்டிலும் சிறப்பாக சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை

விப்ரோ பங்கு குறித்து ஜெஃப்ரீஸ் தரகு நிறுவனமான அண்டர்பெர்பார்மிங் என ரேட்டிங் கொடுத்துள்ளது. இப்பங்கின் இலக்கு விலையை 180 ரூபாயாக கொடுத்துள்ள தரகு நிறுவனம், இது தற்போதைய விலையில் இருந்து 8% சரிவைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையானது மீண்டும் வரும்போது விப்ரோ பங்கானது அதனால் பலன் அடையலாம். இது 2026 மற்றும் 2028ம் நிதி ஆண்டுகளுக்கு இடையே முந்தைய ஆண்டை காட்டிலும் 2% வளர்ச்சி சீராக இருக்கும். இதற்கிடையில் இதன் இபிஎஃப் விகிதமானது 2026 மற்றும் 2027ம் நிதியாண்டில் 3 -4% இருக்கலாம் என எதிர்பார்க்கிறது.

நுவாமா தரகு நிறுவனமானது டாப் 10 ஐடி பங்குகளை வாங்கலாம் என கூறியுள்ளது. ஜெனரேடிவ் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய இடையூறுகளின் அபாயத்தை கருத்தில் கொண்டு, தங்களின் மதிப்பீடுகளை பராமரித்து, இலக்கு விலைகளை சற்று குறைத்திருந்தாலும், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் ஆகிய பங்குகளின் தரத்தை வாங்கலாம் என தரம் உயர்த்தியுள்ளது. இருப்பினும், அவர்கள் கோபோர்ஜ், எல்டிஐமைண்ட் ட்ரீ, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், எம்பாசிஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய பங்குகளை தங்களின் விருப்பமான தேர்வுகளாக முன்னிலைப் படுத்தியுள்ளது.

Recommended For You

ஹெச்சிஎல் டெக் பங்கு விலையானது சற்று அதிகரித்து 1328.60 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த மூன்று மாதத்தில் இப்பங்கானது கிட்டத்தட்ட 20% சரிவைக் கண்டு காணப்படுகிறது. விப்ரோ பங்கானது 195.11 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. இப்பங்கானது கடந்த 3 மாதத்தில் 25% காணப்படுகிறது.

டிசிஎஸ் பங்கு விலையானது 2,409.20 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கும் 3 மாதத்தில் 25% சரிவில் காணப்படுகிறது. இதே டெக் மஹிந்திரா பங்கானது 1339.50 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கும் மூன்று மாதத்தில் 15% உள்ளது.ஹெக்ஸாவேர் டெக் பங்கானது 416.95 ரூபாய் என்ற நிலையிலும், இது கடந்த மூன்று மாதத்தில் 45%-க்கு மேல் சரிவிலும் காணப்படுகிறது. கோஃபோர்ஜ் பங்கானத் 1080.60 ரூபாயாக காணப்படும் நிலையில், இப்பங்கும் 42% மேல் சரிவில் காணப்படுகிறது. எல்டிஐமைன்ட்ட்ரீ பங்கு விலை 4,207 ரூபாயாக காணப்படும் சூழலில், 3 மாதத்தில் 32% மேலாக சரிவில் காணப்படுகிறது. பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் பங்கு விலைஆனது 4,638.80 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கு 26% சரிவில் காணப்படுகிறது. எம்பாசிஸ் பங்கானது 2081 ரூபாயாகவும், இது கடந்த 3 மாதங்களில் இப்பங்கானது 27% மேல் சரிவில் காணப்படுகிறது. இன்ஃபோசிஸ் ப்ங்கானது 1249.80 ரூபாயாக காணப்படுகிறது. இது கடந்த மூன்று மாதத்தில் 21% மேல் சரிவில் காணப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+