3 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்தை ரூ. 8 லட்சமாக மாற்றிய ஃபார்மா பங்கு..!! உங்க லிஸ்ட்ல இருக்கா?

இந்திய பங்குச்சந்தையில் சில நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை அள்ளி தந்துள்ளன. குறிப்பாக, மருந்து துறை சார்ந்த ஃபார்மா (Pharma) பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை பல மடங்கு பெருக்கி தந்துள்ளன.

நிஃப்டி ஃபார்மா குறியீடு கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 72% லாபத்தை மட்டுமே கொடுத்துள்ள நிலையில், அதையும் தாண்டி சுமார் 10 மடங்குக்கும் அதிகமான லாபத்தை வழங்கி ஒட்டுமொத்த சந்தையையும் வியக்க வைத்துள்ளது வோக்கார்ட் (Wockhardt) நிறுவனத்தின் பங்கு.

3 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்தை ரூ. 8 லட்சமாக மாற்றிய ஃபார்மா பங்கு..!! உங்க லிஸ்ட்ல இருக்கா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வோக்கார்ட் நிறுவனத்தின் பங்குகளில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது அந்த தொகையின் மதிப்பு 776% அபார வளர்ச்சியை கண்டு 8 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். அந்நிறுவனம் தனது வணிகத்தை புதிய ஆன்டிபயாடிக் மருந்துகள் , பயோடெக்னாலஜி மற்றும் சிறப்பு மருந்து பிரிவுகளுக்கு மாற்றியமைத்ததே முக்கிய காரணமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த வோக்கார்ட் நிறுவனம், தற்போது அதிலிருந்து மீண்டு லாப பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. 2023ஆம் நிதியாண்டில் 2,773 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருமானம், 2026ஆம் நிதியாண்டில் 3,484 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிறுவனம் 2023இல் 621 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்து இப்போது 199 கோடி ரூபாய் லாபம் தரும் நிறுவனமாக மாறியுள்ளது.

Also Read

புதிய ஆன்டிபயாடிக் மற்றும் இன்சுலின் அடிப்படையிலான பயோடெக்னாலஜி பிரிவுகளில் கவனம் செலுத்தி வருவதால் நிறுவனத்தின் வருவாயும் லாபமும் பெருகியுள்ளது. வோக்கார்ட் நிறுவனத்தின் இந்த அதீத வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது Zaynich என்னும் புதிய ஆன்டிபயாடிக் மருந்தாகும்.

கடந்த ஜூன் மாதம் முதல் வோக்கார்ட் பங்கு விலை 1,792 ரூபாய் முதல் 2,422 ரூபாய் என்ற எல்லைக்குள் வர்த்தகமாகி வருகிறது. இன்று 1,989 ரூபாய் என வர்த்தகமாகிறது.இந்த ஆண்டில் மட்டும் 40% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் டெரிவேடிவ்ஸ் ஆராய்ச்சி தலைவர் சுதீப் ஷா 2,340 என்ற விலையை தொட்டுவிட்டால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயரும் என கணித்துள்ளார்.

Recommended For You

32,000 கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பு கொண்ட இந்நிறுவனம் புது புது மருந்துகளை உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இநிறுவன பங்குகளில் 49% பங்குகள் உரிமையாளர்களிடம் உள்ளன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 7% பங்குகளை வைத்துள்ளன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+