1 பங்கினை 10 ஆக பிரிக்கும் நிறுவனம்.. உங்க லிஸ்டுல இருந்தா செம லாபம்..!

இந்தியாவில் வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் வொண்டர் எலக்ட்ரிகல்ஸ் (Wonder Electricals) நிறுவனம் தங்கள் நிறுவன பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பிரிப்பதாக அறிவித்துள்ளது. ஸ்மால் கேப் நிறுவனமான வொண்டர் எலக்ட்ரிகல்ஸின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 591 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்கள் நிறுவன பங்கினை சில்லறை முதலீட்டாளர்கள் கணிசமான அளவு வாங்க வேண்டும் என்றும் டிரேடிங் வால்யூம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பங்கு பிரிப்பு நடவடிக்கையை எடுப்பதாக வொண்டர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1,619 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

1 பங்கினை 10 ஆக பிரிக்கும் நிறுவனம்.. உங்க லிஸ்டுல இருந்தா செம லாபம்..!

இந்த நிறுவன பங்கு கடந்த ஓராண்டில் 591 சதவீதம் லாபம் தந்துள்ளது. ஒரு மாத காலத்தில் சுமார் 22 சதவீதம் லாபம் தந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 224 ரூபாய் ஆகும், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 1,619 ரூபாய் ஆகும்.

இந்த நிறுவன பங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று தனது 52 வார கால உச்சத்தை எட்டியது. இந்த நிறுவனம் தங்களது பங்குகளை 1:10 என்று விகிதத்தில் பிரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து நிறுவனத்தின் பங்கு அடுத்தடுத்து இரண்டு நாட்களில் அப்பா சர்க்யூட் நிலையை எட்டியது. 2,125 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் 71 சதவீத பங்கு புரமோட்டோர்கள் வசம் இருக்கிறது. ரீடைல் முதலீட்டாளர்கள் 17 சதவீத பங்கையும் வெளிநாட்டு நிறுவனங்கள் 10. 91% பங்குகளையும் சொந்தமாக வைத்துள்ளனர்.

இதற்கிடையே வொண்டர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் நடத்திய வாரிய குழு இயக்குனர்கள் கூட்டத்தில் நிறுவன பங்கினை அதாவது ஒரு பங்கினை பத்து பங்காக பிரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வாரிய குழு உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு இனி அது 10 பங்கு என மாறும்.

ஆனால் அவர்களின் முதலீட்டு மதிப்பு என்பது அதே அளவில் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் பங்கு மதிப்பு சுமார் 1000 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+