Yes Bank updates: யெஸ் வங்கியின் லாக் இன் காலம் 3 வருடம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு முதலீட்டாளர்களும் பங்குகளை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளரான எஸ்பிஐ தொடங்கி பல்வேறு வங்கிகளும் முதலீடுகளை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யெஸ் வங்கியின் நிகர சொத்து மதிப்பு அதிகரிப்பு, அதன் மூலதனம் அதிகரிப்பு, அதன் நஷ்டம் அதிகரிப்பு என பல காரணிகளும் சாதகமாக உள்ளன.
ரிசர்வ் வங்கியின் மறுசீரமைப்பு
இது இந்திய ரிசர்வ் வங்கியின் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு மத்தியில், பல்வேறு வங்கிகளும் மறுமூலதனத்தினை செய்யவுள்ளன. இதன் காரணமாக எஸ்பிஐ வங்கியானது யெஸ் வங்கியின் 48% பங்கினை, 6050 கோடி ரூபாய் மதிப்பிலான முன்னதாக வைத்திருந்த நிலையில், இது டிசம்பர் 2022ம் ஆண்டு நிலவரப்படி, 26.14% ஆக குறைந்துள்ளது. தனது பங்கு விகிதத்தினை குறைத்தாலும், இது தற்போதும் பெரிய பங்குதாரர் ஆகவே உள்ளது. இதன் லாக் இன் காலம் 3 ஆண்டுகள் என்பதால் 26% கீழாக குறைக்க முடியாமல் இருந்தது.
செல்லிங் அழுத்தம் இருக்கலாம்
ஆக இந்த லாக் இன் காலம் என்பது குறைந்துள்ள நிலையில், தற்போது இந்த பங்கு விகிதம் குறையலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக யெஸ் வங்கியின் பங்கு விலையானது மேற்கோண்டு சரியலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் எஸ்பிஐ மட்டும் அல்ல, மற்ற தனியார் வங்கிகளும் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற வங்கிகள் வசம்?
எஸ்பிஐ தவிர ஹெச்.டி.எஃப்.சி-யின் வசம் 3.48%மும், ஐசிஐசிஐ வங்கியின் வசம் 2.61% வசமும், ஆக்ஸிஸ் வங்கியின் வசம் 1.57% பங்கும், கோடக் மஹிந்திரா வங்கியின் வசம் 1.32%மும், ஐடிஎஃப்சி வங்கியின் வசம் 1%மும் உள்ளது. ஆக எஸ்பிஐ உள்பட 9 வங்கிகள் வசம் 49% பங்குகள் உள்ளது.
இதில் மார்ச் 2020ல் ஒரு பங்கு 10 ரூபாய்க்கு வாங்கின. தற்போது 8 ரூபாய் பீரிமியம் விலையே காணப்படுகின்றன. ஆக இது முதலீட்டாளர்களுக்கு லாபகரமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் 9 வங்கிகளும் யெஸ் வங்கியில் 10,000 கோடி ரூபாய் மூலதனத்தினை உட்செலுத்தின.
எவ்வளவு பங்குகள்?
எஸ்பிஐ வசம் 26.14% அல்லது 6050 மில்லியன் பங்குகளும், ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வசம், ஐசிஐசிஐ வங்கி உள்பட ஒவ்வொரு வங்கியும் 1000 மில்லியன் பங்குகளையும், ஆக்ஸிஸ் வங்கியின் வசம் 600 மில்லியன் பங்கும், கோடக் மஹிந்திரா வங்கியின் வசம் 500 மில்லியன் பங்கும், பெடரல் வங்கி மற்றும் பந்தன் வங்கியின் ஒவ்வொருத்தரின் வசம் 300 மில்லியன் பங்குகளும், ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் வசம் 250 மில்லியன் பங்குகளும் மார்ச் 5 நிலவரப்படி இருந்தன.
இந்த 8 வங்கிகளும் முன்னதாக 11 பில்லியன் பங்குகளை வைத்திருந்தன. இது தவிர எஸ்பிஐ ஏஎம்சி வசம் 23.67 மில்லியன் பங்குகளும், இது நிஃப்டி 50 ETFல் பங்கினை வைத்துள்ளது. இதே கோடக் ஏஎம்சியில் 11.99 மில்லியன் பங்குகளும், நிப்பான் இந்தியா நிறுவனம் 10.56 மில்லியனும், எஸ்பிஐ இடிஎஃப் பேங்க் நிஃப்டியில் 6.72 மில்லினும், யுடிஐ ஏஎம்சி 5.89 மில்லியனும் வைத்துள்ளது.
விலை குறையலாம்
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் யெஸ் வங்கியின் பங்கு விலை சரியலாம் என நிபுணர்கள் கணித்து வரும் நிலையில், இன்றே இப்பங்கின் விலையானது 4.85% சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது இன்னும் எந்தளவுக்கு சரிவினைக் காணுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எப்படியிருப்பினும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் இப்பங்கின் விலையானது சற்றே ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
நல்ல வணிக வளர்ச்சி
மூன்றாவது காலாண்டில் யெஸ் வங்கியில் நல்ல டெபாசிட் வளர்ச்சி இருந்ததாகவும், இதன் கடன் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இப்பங்கினில் விற்பனை அதிகரிக்கலாம் என்ற நிலையில் நிபுணர்கள் இப்பங்கின் விலை சரியலாம் என கூறியுள்ளனர். இன்று அதனை நிரூபிக்கும் விதமாகவே சரிவினையும் கண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications