ராக்கெட் உயர்வில் யெஸ் பேங்க் பங்குகள்.. ஒரே நாளில் 8% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கியின் (Yes Bank) பங்கு விலை இன்று 8 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளால், முதலீட்டாளர்கள் இந்த பங்கை அதிகம் வாங்குகின்றனர். இன்று காலை ரூ. 20.35ல் துவங்கிய பங்கின் விலை ரூ. 21.02 என்ற அளவை எட்டியது.

யெஸ் வங்கியின் பங்கு விலை உயர்வுக்கு முடிவுகள் இரண்டாம் காலாண்டு முடிவுகள் தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பங்கு எதிர்பார்ப்பை தாண்டி வளர்ச்சியை பதிவு செய்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வராக்கடன் அடிப்படையில் வங்கி அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நிகர லாபம் 145 சதவீதம் அதிகரித்து ரூ. 553 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 225 கோடியாக இருந்தது. வங்கியின் இருப்புநிலையும் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

 ராக்கெட் உயர்வில் யெஸ் பேங்க் பங்குகள்.. ஒரே நாளில் 8% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

யெஸ் வங்கி, அதன் சமீபத்திய நிதிச் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. வங்கி சில்லறை வங்கி, SME கடன் மற்றும் நடுத்தர நிறுவனப் பிரிவுகளில் வலுவான கவனம் செலுத்துகிறது. MD & CEO பிரசாந்த் குமார் தலைமையில், யெஸ் வங்கி தொழில்துறை சவால்களுக்கு மத்தியிலும் அதன் சந்தை நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

யெஸ் வங்கியின் பங்குகளை பொறுத்தவரையில், முன்னணி பகுப்பாய்வாளரான சாய்ஸ் ப்ரோக்கிங்கின் நிர்வாக இயக்குநர் சுமீத் பகாடியா பங்கின் விலை ரூ. 21ஐத் தாண்டினால், புதிய பிரேக்அவுட் அடைய வாய்ப்பு உள்ளது என்றும், முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை ரூ. 18 அளவில் வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குறுகிய காலத்தில் ரூ 24 முதல் ரூ. 26 இலக்கு விலையை எட்ட வாய்ப்புள்ளது. எனவே இந்த பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ. 16 என பரிந்துரைத்துள்ளார்.

இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்கு முன்னதாக யெஸ் வங்கி பங்குகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகின. பெரும் லாபத்தை எதிர்பார்க்காத முதலீட்டாளர்கள், இந்தப் பங்கை அதிகளவில் விற்பனை செய்தனர். இதன் விளைவாக, யெஸ் வங்கி பங்குகள் கடந்த வாரம் முழுவதும் விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. ஆனால் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யெஸ் வங்கியின் பங்கு இன்று குறிப்பிடத்தக்க 10% உயர்ந்து, ஒரு பங்கிற்கு ரூ.21.3ஐ எட்டியது. இருப்பினும், கடந்த மூன்று மாதங்களில் வங்கியின் பங்குகள் 16%க்கும் மேல் சரிவைச் சந்தித்தன. இந்த காலகட்டத்தில் யெஸ் வங்கி பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டை விட சிறப்பாக செயல்பட்டது, இது அதே காலகட்டத்தில் 2% மட்டுமே குறைந்துள்ளது.

இன்றைய 12.45 மணி நிலவரப்படி யெஸ் வங்கி பங்குகள் 7.12% அதிகரிப்புடன் ரூ.20.76 ஆக வர்த்தகம் செய்து வருகிறது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+