யெஸ் வங்கி லிமிடெட், ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக விளங்கியது, ஆனால் தற்போது பங்கு விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. ஜூன் 20, 2025 அன்று வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் போது யெஸ் வங்கியின் பங்கு விலை மும்பை பங்குச்சந்தையில் 1.6% உயர்ந்து 19.78 ரூபாயாக முடிந்தது. இதன் மூலம் யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு 61,941 கோடி ரூபாயாக உள்ளது.
ஆனால் ஒரு காலத்தில் யெஸ் வங்கி கொடுத்த லாபத்தை பார்த்தால் நீங்க ஆடிப்போயிடுவீங்க. 2009-ல் வெறும் 8.49 ரூபாயாக இருந்த யெஸ் வங்கி பங்கு, 2018-ல் 404 ரூபாயை எட்டி அதன் முதலீட்டாளர்களுக்கு சுமார் 4,660% லாபத்தை அள்ளிக்கொடுத்தது.

அப்படி பார்த்தால் 2009ல் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2018ல் சுமார் 47.6 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் இன்று அது வெறும் 5,000 ரூபாயாக சரிந்தது மட்டும் அல்லாமல் சுமார் 95% இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எல்லவற்றுக்கும் முக்கிய காரணம் ரானா கபூர். யார் இவர்..? இவர் என்ன செய்தார்..?
யெஸ் வங்கியின் 2020 நெருக்கடி மற்றும் RBI தலையீடு:
யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வங்கியின் நிலை தலைகீழாக மாறியது என்றால் மிகையில்லை. SBI தலைமையிலான வங்கிகள், 10,000 கோடி ரூபாய் மீட்புத் திட்டத்துடன் வங்கியை திவால் ஆவாதில் இருந்து காப்பாற்றியது.
யெஸ் வங்கியின் பங்கு சரிவு 2018-க்குப் பின் தொடங்கி, 2019-ல் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. 2020-ல், வங்கியின் நிதி நிலை மோசமடைந்ததால், RBI தலையிட்டு, வாராக் கடன்கள், மோசடி குற்றச்சாட்டுகள், மற்றும் நிர்வாகக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, வங்கி செயல்பட தற்காலிக தடையை விதித்தது. இதன் பின்பு தான் எஸ்பிஐ தலைமையிலான குழு தலையீட்டு நிலைமையை சரி செய்தது.
2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் யெஸ் வங்கி தனது நிதி நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் (NII) 6% உயர்ந்து 2,271.3 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 59% வளர்ந்து 744.6 கோடி ரூபாயாகவும் உள்ளது. நிகர வட்டி மார்ஜின் (NIM) 2.4% ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications