நாட்டின் மிக பிரபலமான பொழுதுப்போக்கு அம்சங்களை கொண்ட ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று மதிய அமர்வில் 20% அதிகரித்துள்ளது.
இந்த திடீர் விலையேற்றமானது முதலீட்டாளர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது எனலாம்.
என்ன தான் காரணம்? ஏன் இந்த 20% ஏற்றம்? இந்த ஏற்றம் தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இன்வெஸ்கோவின் அதிரடி முடிவு
ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான இன்வெஸ்கோ, நிறுவனத்தின் குழுவினை மாற்றியமைப்பதற்கான மிகப்பெரிய கோரிக்கையினை கைவிட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் குழு மத்தியில் பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது. இதற்கிடையில் தான் இப்பங்கின் விலையானது, மதிய அமர்வில் 20 சதவீதம் வரையில் ஏற்றம் கண்டது.
தற்போதைய நிலவரம் என்ன?
எனினும் தற்போது சற்று குறைந்து என்.எஸ்.இ-யில் 2.14 மணி நிலவரப்படி 17.61% அதிகரித்து, 301.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 307.25 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 281.65 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் 17.34% அதிகரித்து, 300.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 307.25 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 281.65 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 378.60 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 166.80 ரூபாயாகும்.
இன்வெஸ்கோவின் கோரிக்கை
இன்வெஸ்கோ மார்ச் 23 அன்று, ஆறு சுயதீன இயக்குனர்களை சேர்க்க ஒரு அசாதாரணமான பொதுக்குழு கூட்டத்தினை தொடர வேண்டும் என்று கூறியது. ஆனால் ஜீ நிறுவனம் சோனியுடன் இணைவதன் மூலம் இயக்குனர் குழுவினை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுசீரமைப்பு இருக்கலாம்
இது குறித்து இன்வெஸ்கோ நாங்கள் இந்த கோரிக்கையை வைத்த பின்னர், ஜீ - சோனியுடன் இணைப்பு ஓப்பந்தத்தில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலையில், ஜீ நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் பெரும் சாத்தியம் இருக்கலாம். ஆக இந்த இரு நிறுவனங்களும் இணைக்கப்படும்போது நிச்சயம் குழு வாரியத்தில் மாற்றங்கள் இருக்கலாம். குழு மறுசீரமைக்கப்படலாம். இது இந்த குழுமத்தினை மேற்கொண்டு வலுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இந்த உற்சாகத்தில் பங்கு விலையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. முதலீட்டாளர்களும் நல்ல லாபத்தில் உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications