பங்கு சந்தை என்றாலே ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயம் தான். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கத்தினால் சர்வதேச பங்கு சந்தைகள் கூட பெரும் ஆட்டம் கண்டு வருகின்றன.
இப்படி கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது ஏன்? இதற்கு என்ன காரணம் என கேட்டால், இதற்கு ஒன்றல்ல, இரண்டல்ல பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் முதல் நாள் வர்த்தகத்தில் 20% வீழ்ச்சி, மறுநாள் 23% ஏற்றம், மொத்தத்தில் என்ன தான் நடக்கிறது. இப்படி அதிரடியான மாற்றங்களை கண்டு வரும் அந்த பங்கு எது? ஏன் அப்படி வீழ்ச்சி கண்டது. என்பதை பற்றித் தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.
அதென்ன பங்கு?
மேலே நாம் குறிப்பிட்ட அந்த பங்கின் பெயர் ஜீ எண்டர்டெயின்மென்ட் தான். சரி காரணங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் வரலாற்றினை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா? ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினை நமக்கெல்லாம் ஒரு பொழுதுபோக்கு நிறுவனமாகத்தான் தெரியும். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு அதன் ஒரு முகம் உள்ளது அது தான் எசெல் குழுமம்.
எசெல் குழுமம் பற்றி சில
எசெல் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஊடக நிறுவனம் தான் ஜீ எண்டர்டெயின்மென்ட், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், 15 டிசம்பர் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் அப்போதைய தலைவர் சுபாஷ் சந்திரா, எனினும் தற்போதைய ஜீ எண்டர்டெயின்மென்ட் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் புனித் கோயங்கா தான்.
யெஸ் பேங்க் பிரச்சனை
யெஸ் பேங்க் பற்றிய கதையெல்லாம் முன்னரே நிறைய படித்து இருப்போம். யெஸ் பேங்க் பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் மோசடி நடந்திருப்பதாக அமலாக்க இயக்குனரகம் கூறியது. சரி இதற்கும், பங்கு வீழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள். யெஸ் பேங்கில் நடந்த பிரச்சனையின் காரணமாக பல நிறுவனங்களுக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. இதில் ஒருவர் தான் எசெல் குழுமத்தின் ஊக்குவிப்பாளரான சுபாஷ் சந்திராவும். அவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதால் தான், அந்த நிறுவன பங்கின் விலை கடந்த செவ்வாய்கிழமையன்று 20% வீழ்ச்சி கண்டதாகவும் கூறப்படுகிறது.
எசெல் கடன் பெற்றது
இந்த நிலையில் புதன் கிழமையன்று சுபாஷ் சந்திரா அமலாக்க அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் எசெல் குழுமத்தினால் உறுதிபடுத்தப்பட்டது. மேலும் இந்த அறிக்கையில் ஜீ எண்டர்டெயின்மெண்டுக்கு யெஸ் வங்கியிடமிருந்து எந்த கடனும் இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எசெல் குழுமம் கூறியதாக வெளியான செய்தியில், பெறப்பட்ட கடன் அனைத்தும் அதன் உள்கட்டமைப்பு வசதிக்காக பெறப்பட்டதாகவும், அவை முழுமையாக பாதுக்காக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பங்கு வீழ்ச்சி
இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று பிஎஸ்இ-யில் ஒரு பங்கிற்கு 133.20 ரூபாயாக முடிவடைந்தது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவானது. அதிலும் தொடர்ந்து கடந்த நான்கு வர்த்தக தினங்களாக வீழ்ச்சி கண்டு வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் இந்த நிறுவனத்தின் 12.9 மில்லியன் பங்கு பரிமாற்றங்கள் என்என்இ மற்றும் பிஎஸ்இ-யில் பெரியளவில் கைமாறியுள்ளன.
40% சரிவு
இதே இந்த பங்கின் விலையானது இந்த ஆண்டு தொடக்கம் முதல் கொண்டு 50% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், ஆண்டு தொடக்கத்தில் இதன் விலை 292 ரூபாயாகவும் இருந்தது. அதே காலகட்டத்தில் சென்செக்ஸின் 23% வீழ்ச்சிக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த நிறுவன பங்கின் விலை 40% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
இதுவும் ஒரு காரணம்
ஆனால் இப்படி படுவீழ்ச்சி கண்டதற்கு இது மட்டும் காரணம் அல்ல, கார்ப்பரேட் ஆளுகை குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் இயக்குனர்கள் சிலரின் ராஜினாமாக்கள் காரணமாக நிறுவனத்தின் புத்தகங்களை ஆய்வு செய்ய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் உத்தரவிட்டதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின.
மதிப்பீடு குறைப்பு
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதியன்று பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், ஜீ எண்டர்டெயின்மென்ட் அதையும் ஒப்புக் கொண்டுள்ளது. இத்தகைய பிரச்சனைகளுக்கும் மத்தியில் Brickwork Ratings நிறுவனம் ஜீ எண்டர்டெயின்மென்ட் பங்குகளாக மாற்ற முடியாத பங்குகள் என பல பிரச்சனைக்கு மத்தியில் மதிப்பீட்டை குறைத்தது.
இது தான் காரணம்
இது தவிர சில இயக்குனர்கள் ராஜினாமா மற்றும் நிறுவன செயலாளர்களின் ராஜினாமாவுடன், இப்போது இந்த நிறுவனத்தில் 5% பங்குகளை வைத்திருக்கும் விளம்பரதாரர் மற்றும் விளம்பரதாரர் பங்குகளை கட்டுப்படுத்துவது, சுபாஷ் சந்திரா பதவி விலகியது. இதெல்லாவற்றோடு நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குனராக நீடிக்கும் வாரியம் என அடுக்கடுக்கடுக்காக மதிப்பீட்டு நிறுவனம் காரணங்களை அடுக்கியது.
நல்ல வாய்ப்பு உள்ளது
எப்படி எனினும் இந்த பொழுதுபோக்கு நிறுவனம் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விளம்பரதாரர்களின் நிறுவப்பட்ட நல்ல பதிவினாலும், நிறுவனத்தின் போதுமான நிதி விவரங்களைத் தவிர, குறைந்த கடனுடன் செயல்பாடுகளின் அளவு அதிகரிப்பதில் நிறுவனம் பிரதிபலிக்கிறது. ஆக இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது என, அந்த மதிப்பீட்டு நிறுவனம் அப்போது ஜீ எண்டர்டெயின்மென்டுக்கு சர்டிபிகேட்டும் கொடுத்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications