ஹைதராபாத்தை தளமாக கொண்டு செயல்படும் ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம், அதிநவீன பாதுகாப்பு பயிற்சி தீர்வுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தீர்வுகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு படையினருக்கான பாதுகாப்பு பயிற்சி மற்றும் போர் தயார்நிலை அளவீட்டில் இந்நிறுவனம் ஒரு சிறந்த நற்பெயரை பெற்றுள்ளது. சென்சார் மற்றும் சிமுலேட்டர் தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு பயிற்சி மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பில் ஜென் நிபுணத்துவம் பெற்றது.
ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 15வது எடிஷன் பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஜென் டெக்னாலஜிஸின் சமீபத்திய ஏஐ பவர் பாதுகாப்பு அமைப்புகளை வெளியிட்டார். இந்நிறுவனம் வளமான வர்த்தக வளர்ச்சி மற்றும் சிறந்த நிதி நிலைமை கொண்டுள்ளது. 2024 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனம் வசம் ரூ.956.74 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் உள்ளன.

ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2024 செப்டம்பர் காலாண்டில் நிகர வருவாயாக ரூ.241.84 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 264 சதவீதம் அதிகமாகும். 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.63.44 கோடி ஈட்டியிருந்து. இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 365 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஜென் டெக்னாலஜிஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.83 சதவீதம் குறைந்து ரூ.1,470.00ஆக இருந்தது.
ஜென் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ஜென் டெக்னாலஜிஸ் பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 600 சதவீதம் உயர்த்தியுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 2,425 சதவீதம் அதிகரித்துள்ளது. மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்து வரும், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த இந்நிறுவன பங்கின் மீது முதலீட்டாளர்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது.
Story Writtern by: Subramanian


Click it and Unblock the Notifications