இரண்டே ஆண்டுகளில் ஜென் ஜென் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் மல்டி பேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு கணிசமான வருவாயை ஈட்டி தந்துள்ளது.
பாதுகாப்புத்துறை உபகரணங்கள், ட்ரோன் தொழில்நுட்பங்களில் புதிய கருவிகளையும், போர்க்கள கண்காணிப்பு அமைப்புகளையும் உருவாக்கி வரும் ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஐந்தாண்டு காலத்தில் 3659 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 958 சதவீதம் உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 193 ரூபாயாக இருந்தது அதுவே தற்போது 2000 ரூபாயை கடந்து வர்த்தகமாகி வருகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 160 சதவீதம் லாபத்தை தந்து முதலீட்டாளர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. இந்த நிறுவன பங்கினை வாங்கலாம் என பிரபல தரகு நிறுவனங்கள் மதிப்பீடு தந்துள்ளது. பிரபல தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் இந்த பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதன் ஒரு பங்கு மதிப்பு 2,400 ரூபாய் வரை செல்லும் என்றும் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 60% என்ற அளவில் உயர்ந்து உயரும் என மோதிலால் ஓஸ்வால் கணித்துள்ளது.
இந்த நிறுவனம் தற்போது சிமுலேட்டர்கள் மற்றும் ஆன்டி ட்ரோன் பிரிவுகளில் பல கோடிகளுக்கான ஆர்டர்களை கைப்பற்றியுள்ளது என மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் குறிப்பிடுகிறது. அண்மையில் தான் ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏவிடி சிமுலேஷன் என்ற சிமுலேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது.
இது தவிர இந்த நிறுவனம் ரிமோட்டில் இயங்கக்கூடிய ஆயுதங்கள் மற்றும் போர்களத்திற்கு தேவையான கண்காணிப்பு அமைப்புகளை அண்மையில் தான் அறிமுகம் செய்தது.
எனவே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 2000 ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது கூடிய விரைவில் இது 2400 ரூபாயை எட்டும் என மோதிலால் ஓஸ்வால் கூறுகிறது. மற்றொரு தரகு நிறுவனமான நுவாமாவும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2200 ரூபாயை எட்டும் என தெரிவித்துள்ளது. ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 18,636 கோடி ரூபாய் ஆகும்.
இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ 172.89, ஃபேஸ் வேல்யூ 1. கடந்த 2024ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 455 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டியுள்ளது. இதில் 130 கோடி லாபம் ஆகும். இந்த நிறுவனத்தில் 51.26 சதவீத பங்குகள் பிரமோட்டோர்கள் வசம் இருக்கின்றன, சில்லறை முதலீட்டாளர்கள் 34.97 சதவீத பங்குகளையும், வெளிநாட்டு நிறுவனங்கள் 5.72 சதவீத பங்குகளையும், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் 4.5 சதவீத பங்குகளையும் வைத்திருக்கின்றன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications