குயிக் காமிக்ஸ் பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய செப்டோ நிறுவனம் கூடிய விரைவில் ஐபிஓ வெளியீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக செப்டோ நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இடம் ஆவணங்களை தாக்கல் செய்ய இருக்கிறது.மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தின் இந்த பணிகள் நடைபெறும் என எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட கிரானா கார்ட் நிறுவனம் தான் செப்டோ நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறது. தற்போது சிங்கப்பூரில் இருந்து செயல்பட்டு வரும் இந்த அலுவலகம் முழுவதுமாக இந்தியாவிற்கு மாற்றுவதற்கான அனுமதியை செப்டோ நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஜனவரி 19ஆம் தேதி செப்டோ நிறுவனத்தின் வாரிய இயக்குனர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

அந்த கூட்டத்தில் எவ்வளவு தொகைக்கு ஐபிஓ வெளியீடு செய்வது என்பன உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அனைத்தும் திட்டமிடப்படி நடைபெற்றால் ஏப்ரல் மாதத்தில் செப்டோ நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்திய சந்தையில் பிளிங்கிட்டை சொந்தமாக வைத்திருக்கக்கூடிய ஸோமேடோ நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல இன்ஸ்டாமார்ட் எனும் குயிக்காமர்ஸ் தளத்தின் உரிமையாளரான ஸ்விக்கியும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் வெளியாகும் அதிக மதிப்பு கொண்ட ஒரு ஐபிஓ-வாக செப்டோ நிறுவனத்தின் ஐபிஓ இருக்கும் என சொல்லப்படுகிறது. செப்டோ நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கக்கூடிய கிரானாகார்ட் நிறுவனம் தனக்கு கீழ் மூன்று நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு செப்டோ பிளாட்பார் வழியாக வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர்க்கிறது.
இந்த பிசினஸ் மாடலை மாற்றுவதற்கு செப்டோ நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு செப்டோ நிறுவனம் 4454 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 120 சதவீதம் அதிகமாகும். செப்டோ நிறுவனம் செப்டோ கஃபே என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் தின்பண்டங்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
தற்போது செப்டோ நிறுவனத்தின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் தான் செப்டோ நிறுவனம் சுமார் 350 மில்லியன் டாலர்களை நிதியாக திரட்டியது .தற்போது சுமார் 24 நகரங்களில் செயல்பட்டு வரக்கூடிய செப்டோ நிறுவனம் அடுத்த காலாண்டுக்குள் 50 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் குயிக் காமர்ஸ் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க வண்ணம் இருக்கிறது. எனவே இவற்றின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. மளிகை பொருட்கள் தாண்டி பல்வேறு ஆடம்பர பொருட்களை கூட இவை டெலிவரி செய்ய தொடங்கிவிட்டன.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications