சோமேட்டோ பங்கு ஒதுக்கீடு எப்போது.. பங்கு சந்தையில் பட்டியல் என்று.. இதோ முழு விவரம்..!

சோமேட்டோ நிறுவனம் அதன் பொது பங்கு வெளியீடு மூலமாக 9,375 கோடி ரூபாய் நிதியினை திட்டமிட்டுள்ளது.

இந்த ஐபிஓ முலம் அதன் ஆரம்பகால முதலீட்டாளரான Info Edge India Ltd நிறுவனம் 375 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், சோமேட்டோ நிறுவனம் புதிய வெளியீடாக 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் வெளியிட்டது.

இந்த பங்கு வெளியீட்டினை ஜூலை 14 - 16 அன்று இந்த பங்கினை வெளியிட்டது.

பங்கு விலை நிர்ணயம்

பங்கு விலை நிர்ணயம்

இந்த பங்கு வெளியீட்டில் விலை 72 - 76 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளையும், அதற்கு அதிகமாக வேண்டுமெனில் 195ன் மடங்கில் ஏலம் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இந்த மொத்த பங்கு வெளியீட்டில் 75% வரை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 15% நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு ஒதுக்கீடு எப்போது?

பங்கு ஒதுக்கீடு எப்போது?

பங்கு வெளியீட்டினை செய்துள்ள சோமேட்டோ நிறுவனம் ஜூலை 23 அன்று, அதன் பங்கினை ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஜூலை 26 அன்று பங்கு கிடைக்காதவர்களுக்கு ரீபண்ட் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனியடுத்து ஜூலை 27 அன்று டீமேட்களுக்கு பங்குகள் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குகளுக்கு விண்ணப்பம்

பங்குகளுக்கு விண்ணப்பம்

தனி நபர் சில்லறை முதலீட்டாளர்களின் சந்தா 3.93 மடங்கு செய்யப்பட்டுள்ளது. இதே நிறுவனங்களின் பங்களிப்பு என்பது 28 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் 17.36 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பங்கு சந்தைக்கு தரவுகள் கூறுகின்றன.

பங்கு சந்தையில் பட்டியல் எப்போது?

பங்கு சந்தையில் பட்டியல் எப்போது?

பங்கு ஒதுக்கீடு மற்ற செயல்பாடுகள் முடிந்த பின்னர் ஜூலை 28 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதெல்லாம் சரி, இந்த விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது? வாருங்கள் பார்க்கலாம். இதற்காக

https://www.bseindia.com/investors/appli_check.aspx இணைய தளத்தில் Equity என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதில் zomato limited என்ற பெயரினை செலக்ட் செய்யவும். அதன் பிறகு உங்களது விண்ணப்பத்தின் நம்பரை கொடுக்கவும். அதன் பிறகு உங்களது பான் நம்பரையும் கொடுத்து, கேப்சா எழுத்தினையும் கொடுத்து சர்ச் என கொடுக்கவும்.

இப்படியும் விவரங்களை பார்க்கலாம்

இப்படியும் விவரங்களை பார்க்கலாம்

இதன் பிறகு ris.Linkintime.com/ipostatus/ என்ற லிங்கினை பயன்படுத்தி லாகின் செய்யவும். அதன் பிறகு IPOவினை செலட் செய்து, zomato limited என்பதை கொடுக்கவும்.
இதன் பிறகு Search பட்டனை கொடுத்து, zomato IPO allotment என்பதை கொடுக்கவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+