இந்தியாவின் புகழ்பெற்ற உணவு டெலிவரி நிறுவனமான ஸோமேட்டோ (zomato ) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூலை 15ஆம் தேதி பங்குச்சந்தையில் 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் மூலம் ஸோமேட்டோ நிறுவனத்தின் பங்கு தனது 52 வார கால உச்சமான 232 ரூபாயை எட்டியது. கடந்த ஓராண்டுகளாக இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு 185 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது.
ஸோமேட்டோ நிறுவனம் தங்களது செயலியில் பிளாட்பார்ம் கட்டணத்தை ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாய் என உயர்த்தியது. இந்த பிளாட்பார்ம் கட்டணமானது டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸோமேட்டோவின் லாப விகிதத்தில் சற்று மாறுபாடு ஏற்படும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். எனவே தான் பங்கு மதிப்பு 52 வார உச்சத்தை எட்டியது.
இதனிடையே சர்வதேச பங்குச்சந்தை தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி 1 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தால் கூட , இந்த நிறுவனத்தின் மார்ஜினில் 20 அடிப்படை புள்ளிகளை உயர்த்தும் என்றும் நிறுவனத்தின் வளர்ச்சி 5-6 சதவீதம் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பங்கிற்கு "ஓவர் வெயிட்" என மதிப்பீடு தந்துள்ள மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.235 என்ற நிலையை எட்டும் எனக் கூறியது.
எலாரா கேபிடல் நிறுவனம் பிளாட்பார்ம் கட்டண உயர்வின் மூலம் ஸோமேட்டோவின் வருவாய் அதிகரிக்கும் என்றும் லாபம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் உணவு பிரிவு ஆண்டுக்கு 87 கோடி ஆர்டர்களை கையாளும் வகையில் உயரும் என தெரிவித்துள்ளது.
எனவே 1 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு என்பது இந்த நிறுவனத்தின் லாபத்தில் பெருமளவு எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளது. எலாரா நிறுவனம் ஸோமேட்டோ பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது. ஒரு பங்கின் மதிப்பு ரூ. 280 வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனுடைய ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் ஸோமேட்டோவின் பங்குகள் 300 ரூபாயை எட்டும் என தெரிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி ஸோமேட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததை அடுத்து அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 76 ரூபாய் ஆகும். 2024 ஆம் நிதியாண்டில் இறுதிகாலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 3,797 கோடி ரூபாய் அதில் லாபம் 125 கோடி ஆகும். இந்த நிறுவன பங்குகளில் சுமார் 55 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்துள்ளன. 29 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களும் 11.96 சதவீதம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் கொண்டுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications