சோமேட்டோ இந்திய ஸ்டார்ட்அப் துறையின் வெற்றி சின்னமாக விளங்கும் முன்னணி உணவு விநியோக நிறுவனம் ஜூன் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது. 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு சோமேட்டோ முதல் முறையாக லாபத்தை பதிவு செய்துள்ளது.
இக்காலாண்டில் 2 கோடி ரூபாய் அளவிலான தொகையை லாபத்தை சோமேட்டோ பதிவு செய்த நிலையில் இன்று பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் தடாலடியாக 12% உயர்ந்தது. இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் லாபத்தை பெறவே முடியாது என்ற கருத்து நிலவிய காரணத்தால் சோமேட்டோ, பேடிஎம் உட்பட பல நிறுவன பங்குகள் ஐபிஓ விலையை விடவும் குறைவாக இருக்கிறது.

இந்த நிலையில் அனைத்து விமர்சனங்களையும் உடைந்து எறியும் வகையில் சோமேட்டோ ஜூன் காலாண்டில் 2 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. லாபத்தின் அளவு என்னவோ மிகவும் குறைவாக இருந்தாலும் லாபம் அடையும் பாதை மற்றும் வர்த்தக முறையை சோமேட்டோ எட்டிவிட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சோமேட்டோ பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 86.22 ரூபாய் முடிந்த நிலையில் இன்று காலையில் 89 ரூபாயில் துவங்கி, அதிகப்படியாக 12 சதவீதம் உயர்ந்து 98.39 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. 2 கோடி ரூபாய் லாபம் மூலம் ஒரு பங்கிற்கு 10 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்த காரணத்தால் சோமேட்டோ சந்தை மதிப்பு இன்று பல கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
சோமேட்டோ நிறுவனம் ஜூலை 2021 இல் இந்திய பங்குச் சந்தைகளில் 76 ரூபாய் வெளியிட்டு விலைக்கு 115.00 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் அதன் பின்பு தொடர் சரிவு மூலம் 44 ரூபாய் வரையில் சரிந்தது, கடந்த 6 மாதத்தில் 90 ரூபாய் வரையில் உயர்ந்து, தற்போது 2 கோடி ரூபாய் லாபத்தின் மூலம் 100 ரூபாய் நோக்கி பயணிக்கிறது.
சோமேட்டோ நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது, இதோடு ஜூன் காலாண்டில ரூ.2,416 கோடி வருவாய் ஈட்டி அசத்தியுள்ளது. முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் வருவாய் 70.9 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், சோமாட்டோ சுமார் 186 கோடி ரூபாய் அளவிலான இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சோமேட்டோ நேற்று 73,180 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை கொண்ட நிலையில் இன்று 82000 கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் சோமேட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8820 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் சோமேட்டோ-வுக்கு கிடைத்த பெரிய கிப்ட்.


Click it and Unblock the Notifications