இந்தியாவில் மொத்தமாக 31 பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் உள்ள நிலையில் வாரா கடன் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி 11 வங்கிகளில் ஆய்வு செய்து வருகிறது. ஆர்பிஐ எடுத்து வரும் இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கை மூலமாகப் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் மெருகேறும்.
ரிசர்வ வங்கியின் சரிபார்ப்பு நடவடிக்கையால் இந்த 11 வங்கிகளிலும் கடன் அளிப்பதில் சிக்கல் ஏற்படும். வாரா கடன், வங்கியின் மூலதனம் ஆகியவை குறித்து இந்த ஆய்வு செய்யப்படுகிறது. இதனால் பெரும் நிறுவனங்களை விட எம்எஸ்எம்ஈ கீழ் கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்குப் பெறும் சிக்கலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
11 வங்கிகள் பட்டியல்
ஆர்பிஐ-ன் சரிபார்ப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ள 11 வங்கிகள் பட்டியல்.
அலகாபாத் வங்கி,
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா,
கார்ப்பரேஷன் வங்கி
ஐடிபிஐ வங்கி
யுகோ வங்கி
பாங்க் ஆப் இந்தியா
மத்திய வங்கி
இந்திய வெளிநாட்டு வங்கி
ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்
தேனா வங்கி
மகாராஷ்டிரா வங்கி
மேலும் வங்கிகள்
மத்திய அரசிடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஆரிபிஐ சரிபார்ப்பு நடவடிக்கையின் கீழ் மேலும் பல வங்கிகள் மோசமான செயல்திறனால் ஆய்வுக்குட்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மதிப்பீட்டு நிறுவனங்கள்
மதிப்பீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பட்டியலின் படி ஆந்திரா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து ஆகிய பொதுத் துறை வங்கிகள் ஆரிபிஐ-ன் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் கீழ் ஆய்வில் சிக்க வாய்ப்புள்ளது.
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
ஆர்பிஐ எடுத்து வரும் வங்கிகளில் உள்ள வாரா கடன் சரிபார்ப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு எவ்வளவு மதிப்புடைய வாரா கடன்களைத் தொடர்ந்து நீட்டிக்கலாம் என்பது போன்றவற்றில் வரம்புகள் விதிக்கப்படும். அப்போது எம்எஸ்எம்ஈ கீழ் கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு உள்ள கடன்களில் சிக்கல் வரும்.
கார்ப்ரேட் நிறுவனங்கள்
பெரிய நிறுவனங்களால் கார்ப்ரேட் பாண்டு பத்திரங்களை அணுக முடியும் என்பதால் இந்த வங்கிகளில் உள்ள வாரா கடன் சரிபார்ப்பு நடவடிக்கைகளால் இவர்களுக்குப் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் முத்த வங்கி அதிகரி ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
சிக்கலில் எம்எஸ்எம்ஈ பிரிவு கடன் சேவை
பொதுத் துறை வங்கிகள் மீது எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளால் எம்எஸ்எம்ஈ பிரிவுகளின் கடன் அளவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது மட்டும் உறுதி என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனை வைத்துப் பார்க்கும் போது வரும் நாட்களில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்காகக் கடன் அளிப்பது பொதுத் துறை வங்கிகளில் பெறும் அளவில் சரிய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications