சம்பளம் பெறுபவர்களின் முதன்மை சேமிப்பு என்றால் அது PF பணம்தான். ஆனால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமீபத்தில் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக பிஎஃப் கணக்குகளில் கேட்பாரற்று கிடக்கும் தொகையின் அளவு அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. வியாழக்கிழமை அன்று மாநிலங்களவையில் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, 2024-ஆம் நிதியாண்டில் செயல்பாட்டில் இல்லாத இன்னாப்பரேட்டிவ் EPF கணக்குகளின் எண்ணிக்கை 84 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு செயல்பாட்டில் இல்லாத கணக்கில் இருக்கும் தொகையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. உதாரணமாக 2021-ஆம் நிதியாண்டில் ரூ. 33,513 இருந்த தொகை 2024-ஆம் நிதியாண்டில் ரூ. 39,460 ஆக அதிகரித்திருக்கிறது.

2021-ஆம் நிதியாண்டு முதல் 2024-ஆம் நிதியாண்டு வரை செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கை, கணக்கில் எவ்வளவு தொகை இருந்தது? அதில் எவ்வளவு செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களையும் ஷோபா வெளியிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் பார்க்கும்போது 2021-ஆம் நிதியாண்டில் செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கை 11,72,923-ஆக இருந்தது. 2022-ஆம் நிதியாண்டில் 13,41,848 ஆகவும், 2023-ஆம் நிதியாண்டில் 17,44,518 ஆகவும், 2024-ஆம் நிதியாண்டில் 21,55,387 ஆகவும் அதிகரித்துள்ளது. அதாவது 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரையில் சுமார் 84 சதவீத கணக்குகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
கடந்த நான்கு வருடத்தில் உரிமை கோரப்படாமல் இருந்த தொகை:
2020 டூ 2021 - ரூ. 3,930.85 கோடி
2021 டூ 2022 - ரூ. 4,962.70 கோடி
2022 டூ 2023 - ரூ. 6,804.88 கோடி
2023 டூ 2024 - ரூ. 8,505.23 கோடி
உரிமை கோரப்படாத தொகையின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்திருப்பதை இதிலிருந்து பார்க்க முடியும். 2021-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 116 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் ஓரளவுக்கு EPFO அமைப்பு செட்டில்மெண்ட் செய்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் செட்டில்மெண்ட் செய்யப்பட்ட தொகை:
2020 டூ 2021 - ரூ. 1,855.55 கோடி
2021 டூ 2022 - ரூ. 2,269.75 கோடி
2022 டூ 2023 - ரூ. 2,673.98 கோடி
2023 டூ 2024 - ரூ. 2,632.29 கோடி
செயல்படாமல் இருக்கும் கணக்குகள் அதிகரிக்க என்ன காரணம்?: ஒரு சில ஊழியர்கள் வேலை மாற்றத்திற்கு பிறகு வேறு நிறுவனத்தில் சேரும் பட்சத்தில் பழைய அக்கவுண்ட்டை அப்படியே விட்டு விடுகின்றனர். அதேபோல தங்களுடைய கேஒய்சி விபரங்களை அப்டேட் செய்யாமல் இருக்கும் உறுப்பினர்களின் கணக்குகள் சிலவற்றை அடையாளம் கண்டு ஈபிஎஃப்ஓ அமைப்பு செயல்படாத கணக்காக மாற்றிவிடும்.
எனவே அவ்வப்போது கேஒய்சி விவரங்களை சரி பார்ப்பது அவசியம். இதற்கு ஈபிஎஃப்ஓ அமைப்பு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிதி ஆப்கே நிகாத் 2.0 என்ற முகாம் மூலம் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நீங்களும் வேலை மாறி இருந்தால் உடனே உங்களுடைய பழைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலமாக புதிய பிஎஃப் கணக்கிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளுங்கள். தேவைப்படும் பட்சத்தில் பிஎஃப் பணத்தை திரும்ப பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பியுங்கள்.
இதற்கு முன்னர் வரை பிஎஃப் பணத்தை திரும்ப பெறுவதற்கு 8 முதல் 9 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது ஒரு சில கிளைம் ரெக்வஸ்ட்டை EPFO அமைப்பு இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் பிராசசிங் செய்கிறது. அதோடு ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியையும் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. எனவே உங்கள் உறவினர்களின் பணமோ அல்லது உங்கள் பணமோ எடுக்கப்படாமல் இருந்தால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
