இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்கள் கடன் சுமையும், தாமதமான பேமெண்ட் பிரச்சனைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திருத்தியமைக்கப்பட்ட எம்எஸ்எம்இ சட்டம், 2023 சட்டத்தில், வருமான வரிச் சட்டத்தின் விதி 43பி (h) வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த விதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) 45 நாட்களுக்குள் பேமெண்ட் செத்துவதை உறுதி செய்கிறது. இதனால் MSME நிறுவனங்களுக்கு என்ன பலன்..? மத்திய அரசு இத்தகைய கடுமையான விதிமுறையைக் கொண்டு வர என்ன காரணம்..?

MSME நிறுவனங்கள் பொதுவாகப் பெரிய நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பிற வெளி நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும், சேவைகளையும் ஒப்பந்த அடிப்படையில் அளிக்கிறது. அப்படி வழங்கப்படும் பொருட்களுக்கும், சேவைகளுக்கு ஒப்பந்ததாரர்கள் குறித்த காலத்திற்குள் பணத்தை வழங்குவதில்லை.
இதனால் MSME நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது, இது சிறிய பிரச்சனையாக இருந்தாலும் MSME நிறுவனங்களின் வளர்ச்சி முதல் கடனை திருப்பி செலுத்துவது வரையில் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் எம்எஸ்எம்இ சட்டம் ( உதயம் திட்டம் ) திருத்தப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் MSME நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள பில்களை 15 முதல் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும், இல்லையெனில் ஒப்பந்தம் கொடுத்த நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் முறை வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
இதன்படி, பெரிய நிறுவனங்கள் 15 நாட்களுக்குள் பணத்தை MSME ஆகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். இதுவே ஒப்பந்தம் செய்திருந்தால் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். காலதாமதம் செய்யப்படும் தொகைக்கு தற்போதுள்ள வங்கி வட்டி விகிதமான 6.75 சதவீதத்திலிருந்து மூன்று மடங்கு வட்டியுடன் செலுத்த வேண்டும்.
மேலும் தற்போது இந்தியா முழுக்க MSME நிறுவனங்களுக்கான தாமதமான பேமெண்ட்களின் அளவு 10.7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், இது நாட்டின் GDP-யில் சுமார் 7.8 சதவீதமாகும். இந்த விதி திறம்பட அமல்படுத்தப்பட்டால், MSME நிறுவனங்களின் பணப்புழக்க பிரச்சனைகளைக் கணிசமாகக் குறைக்கும்.
இதன் மூலம், MSME நிறுவனங்கள் மறுமுதலீடு செய்யவும், விரிவடையவும், பொருளாதாரத்தில் மேலும் பங்களிப்பு செய்யவும் வழிவகுக்கும். மேலும், தெளிவான விதிமுறைகளும் கடுமையான அமலாக்கமும் வணிக நடவடிக்கைகளில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தித் தரும்.
ஆனால் இந்த விதி டெக்ஸ்டைல் போன்ற பல்வேறு துறைக்கு பிரச்சனையாக இருப்பதால், அனைத்து MSME நிறுவனமும் சிறப்பான உள்கட்டமைப்பை நிறுவ வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் MSME நிறுவனங்கள் இயக்கம் பாதிக்கும், சப்ளையர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications