புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச ரிவர்ஸ் பையர் செல்லர் மீட் (Reverse buyer seller meet) சந்திப்பில், 16 நாடுகளைச் சேர்ந்த வாங்குபவர்களிடம் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக PIPDIC தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த கலந்தாய்வு கூட்டத்தை பாண்டிச்சேரி இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் அண்ட் இன்வெஸ்மென்ட் கார்ப்பரேஷன் (PIPDIC) தொழில்துறை அமைப்பு மற்றும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) இணைந்து RAMP திட்டத்தின் கீழ் நடத்தியுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ-க்கள் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என்றும், பல புதிய வாய்ப்புகளுக்கு இந்த கலந்தாய்வு கூட்டமானது வழிவகுத்துள்ளது. மேலும் எம்.எஸ்.எம்.இ-க்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 320-க்கும் மேற்பட்ட சிறு,குறு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த இரண்டு நாட்களில் 500-க்கும் மேற்பட்ட வாங்குபவர், விற்பவர் சந்திப்பானது நிகழ்ந்தது.
எந்தெந்த நாடுகள் பங்கேற்பு?
வாங்குபவர், விற்பவர் இடையேயான இந்த கலந்தாய்வில் லண்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், வியட்நாம், கனடா, ஐக்கிய அமீரகம், மொருஷியஸ் உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றன.
புதுச்சேரி எம்.எஸ்,எம்.இ-க்கள் தற்போது சர்வதேச சந்தைகளில் இதன் மூலம் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த முடியும். இவர்களில் டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், அழகு சாதனப் பொருட்கள், பார்மா நிறுவனங்கள் மற்றும் பொறியியல் சார்ந்த பொருட்கள், தோல் என பலவற்றையும் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இதற்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த வழிவகுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக வேலை வாய்ப்பையும் அதிகரிக்கலாம்.
முக்கிய அனுபவம்!
புதுச்சேரியை பொறுத்த வரையில் இதற்கு முன்னதாக இதுபோன்ற வாங்குபவர், விற்பவர் கலந்தாய்வு கூட்டம் என எதுவும் நடந்ததில்லை. இதனால் சர்வதேச வாடிக்கையாளர்களை எப்படி சந்திப்பது. எப்படி தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்ற தெளிவு பெரிதும் இல்லாமல் இருந்தனர். ஆனால் இந்த நிகழ்வானது நிச்சயம் பலருக்கும் ஒரு பெரிய புரிதலை கொடுத்திருக்கும். வாய்ப்புகள் சிலருக்கு கிடைத்திருந்தாலும், பலருக்கும் இது ஒரு முக்கிய அனுபவமாகவும் மாறியிருக்கும். இது எப்படி தங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது என்பதற்கான தெளிவை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம்,
இது எதிர்காலத்தில் புதுச்சேரி எம்.எஸ்,எம்.இ-க்கள் தங்களை ஏற்றுமதியாளர்களாக நிலை நிறுத்திக் கொள்ள நிச்சயம் உதவிகரமாக இருந்திருக்கும். இது பல புதிய வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் உருவாக்கும். புதுச்சேரியை உலகளாவிய வர்த்தக வரைபடத்தில் ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்துவதற்கான நீண்ட கால பொருளாதார வியூகமாகவும் இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications