இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றால், அது சிறு குறு தொழில்முனைவோர்கள் தான்.
இந்த சிறு குறு தொழில்முனைவோர்களால் தான் இந்தியாவில் பல கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
பல கோடி வேலை வாய்ப்புகள், இந்திய உற்பத்தி பொருளாதாரத்தில் ஒரு கணிசமான பங்கு, ஒட்டு மொத்த இந்திய ஜிடிபியில் ஒரு முக்கிய இடம் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள் இந்த சிறு குறு தொழில் முனைவோர்கள்.
வலைதள விவரம்
MSME தரப்பினரின் புகார்களை எல்லாம் தீர்த்து வைக்க, மத்திய அரசு, சமீபத்தில் ஒரு வலைதளத்தைத் தொடங்கியது. அந்த வலைதளத்தின் பெயர் Champions. அதென்ன சாம்பியன்ஸ் என்று கேட்கிறீர்களா..? Creation and Harmonious Application of Modern Processes for Increasing the Output and National Strength - Champions. வலைதளத்தைக் காண க்ளிக் செய்யவும் - https://champions.gov.in/MyMsme/grievance/Entermenu.aspx
புகார் விவரங்கள்
இந்த வலைதளத்தில் சிறு குறு தொழில்முனைவோர்கள், தங்களின் நிதி, மூலப் பொருள், தொழிலாளர்கள், அனுமதி என பல விஷயங்கள் தொடர்பாக புகார் செய்யலாம். அரசுக்கு ஆலோசனை வழங்கலாம். கொடுத்த புகார் என்ன ஆனது என நீங்களே வலைதளத்தில் பார்க்கலாம். இப்படி பல வசதிகள் இருக்கின்றன.
50,000 புகார்கள்
இந்த வலைதளம் மெல்ல, சிறு குறு தொழில்முனைவோர்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஐந்து வார காலத்தில், சிறு குறு தொழில்முனைவோர்களின் 50,000 புகார்களைத் தீர்த்து வைத்து இருப்பதாக, மத்திய சிறு குறு தொழில்முனைவோர் அமைச்சர் & நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொல்லி இருக்கிறார்.
3 நாட்களுக்குள் நடவடிக்கை
இந்த சாம்பியன்ஸ் வலைதளம் கடந்த 01 ஜூன் 2020 அன்று அதிகாரபூர்வமாக, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் வழியாக பதிவு செய்யப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படுமாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வந்திருக்கும் புகாருக்கு அடுத்த 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்.
7 நாட்கள்
இந்த சாம்பியன்ஸ் வலைதளத்தின் சோதனை வெர்சனை தொடங்கிய போதே "இந்த வலைதளத்தின் வழியாக வரும் புகார்கள் 7 நாட்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும். அதற்கு மேல் ஒரு புகாருக்கு ஒரு தீர்வு கிடைக்காமல் இருக்கக் கூடாது" என சிறு குறு தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலர் ஏ கே சர்மா சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications