இந்தியாவில் அமெரிக்காவிற்கு இணையாக பல துறைகளில் புதிய புதிய ஐடியாக்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தினந்தோறும் துவங்கப்பட்டு வருகிறது.
இதில் பல நிறுவனங்கள் தோற்றுப்போனாலும், சில நிறுவனங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைகிறது. இதனாலேயே இந்திய ஸ்டார்ட்அப் சந்தை மிகப்பெரிய அளவில் நம்பிக்கையாக விளங்குகிறது. சொல்லபோனால் இதன் வளர்ச்சியை கண்டு வியந்து மத்திய அரசும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பல முயற்சிகளை செய்து வருகிறது.
இது புது ரூட்டு போல..!
முதலீடும் வளர்ச்சியும்..
பொதுவாக இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய முதலீடு சேவைப்படுகிறது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் வாயிலாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீட்டை பெறுகிறது.
முதலீடு செய்வோருக்கும் இதுமிகப்பெரிய வாய்ப்பாகவும் அமைகிறது.
மாற்றம்...
இந்த முதலீட்டிலேயே தற்போது மிகப்பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் முதலீட்டு நிறுவனங்களே நேரடியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிலையில், இன்று பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் நேரடியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
வாய்ப்பு..
இதன் மூலம் சில நிறுவன தலைவர்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கவோ, அதன் மூலம் வெளி சந்தையில் அதிகளவில் வர்த்தகம் செய்யவோ ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்கிறார்கள்.
சிலர் தங்களுக்குள் இருக்கும் ஆசை அல்லது விருப்பத்தின் பெயரில் தான் பணியாற்றாத துறை சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர்.
முக்கிய தலைவர்கள்
இந்த இரண்டு பிரிவிலுமே வெற்றியும் லாபமும் உண்டு.
ஆக, 2017ஆம் ஆண்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்துள்ள முக்கிய நிறுவன தலைவர்கள் மற்றும் அவர்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பற்றியே இப்போது பார்க்கபோகிறோம்.
கிரிஷ் மாத்ருபூதம்
பிரெஷ்டெஸ்க் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான கிரிஷ் மாத்ருபூதம் 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 5 நிறுவனங்களில் முதலீடு செய்து அசத்தியுள்ளார்.
அவை வாட்பிக்ஸ், தி கென், இன்னோவ் 8, கோபம்பர் மற்றும் ஐசர்வீஸ்
ராஜன் அனந்தன்
கூகிள் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தான் ராஜன் அனந்தன். இவர் லுசிடெஸ், ஒம்னிபை, இன்னோவ் 8, விஷ்பெரி ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
ஆனந்த் சந்திரசேகரன்
இவர் பேஸ்புக் நிறுவனத்தின் பிளாட்பார்ம் மற்றும் பிராடெக்ட் பார்ட்நெர்ஷிப் பிரிவின் தலைவர் ஆவார். இவர் அன்கேனி விஷன், பைன், லெட்ஸ்வென்சர் மற்றும் இன்னோவ் 8 ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
நந்தன் நீலகேனி
இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான இவர் தி பிரின்ட், 4டிகோ மற்றும் நின்ஜாகார்ட் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
கோகுல் ராஜாராம்
ஸ்கொயர் நிறுவனத்தின் பிராடெக்ட் இன்ஜினியரிங் பிரிவின் உயர் அதிகாரியான இவர் க்யூர்பிட், ஸ்குவாட் மற்றும் வாட்பிக்ஸ் ஆகிய 3 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
குனால் ஷா
ஸ்னாப்டீல் கைப்பற்றிய ப்ரீசார்ஜ் நிறுவனத்தின் தலைவரான குனால் ஷா, ஸ்பின்னி, லெட்ஸ் ரீப் மற்றும் இன்னோவ் 8 ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
வி பாலகிருஷ்ணன்
இன்போசிஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவில் இருந்தி வெளியேறிய வி பாலகிருஷ்ணன், 2017ஆம் ஆண்டில் மட்டும் GSTSTAR, அப்சென்டியா மற்றும் டாக்ஸ்சூத்ரா ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications