கொடா: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு பொறியாளர் மாட்டு சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான மின்கட்டணத்தில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் சேமிக்கிறாராம்.
இந்தியாவில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான தேவையும் வரவேற்பும் எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை புரிந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் கௌ ஆர்கானிக்ஸ் (Gau Organics) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

அமன்ப்ரீத் சிங் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், பிடெக் படிப்பை முடித்துவிட்டு தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் பால் அறிவியல் சம்பந்தப்பட்ட பிரிவில் படிப்பினை முடித்தார். இதனை அடுத்து இஸ்ரேல் சென்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான கல்வியறிவு பெற்றார். பின்னர் நெஸ்லே, அமுல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களோடு பணியாற்றிய இவர் 2015 ஆம் ஆண்டு கௌ ஆர்கானிக்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
இயற்கையான முறையில் நெய், பால், எண்ணெய், வெல்லம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது தான் இவரது இலக்கு. இதற்கு உள்ளூர் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த நிறுவனம் பிரதானமாக நெய் மற்றும் பால் விற்பனையில் தொடங்கியது. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த நிறுவனத்தின் நெய்க்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் கட்டமாக இந்த நிறுவனம் அமேசான் தளத்தில் மட்டுமே தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு முதன் முதலில் இவர்கள் தங்களுடைய சில்லறை விற்பனை கடையை தொடங்கினர். 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரை பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை. ஆனால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கௌ ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது.
கொரோனா காலத்திற்கு முன்னரே இந்நிறுவனம் தங்களுடைய இணையதளத்தை சிறப்பான முறையில் நிறுவியிருந்தது. மேலும் அமேசான், ஷாப்பிஃபை உள்ளிட்ட தளங்களிலும் இவர்களது பொருட்கள் விற்பனைக்கு கிடைத்தன. எனவே கொரோனா காலம் இவர்களது நிறுவனம் வளர்ச்சி அடைவதற்கு பெரும் உதவியாக இருந்தது.
அண்மையில் இந்த நிறுவனம் மாட்டு சாணத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு புதிய முறையையும் கண்டறிந்துள்ளது. அமன்ப்ரீத் சிங் மற்றும் அவரது குழுவினர் இணைந்து மீத்தேனில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் ஒரு ஜெனரேட்டரை உருவாக்கியுள்ளனர்.
தங்கள் பண்ணையில் கிடைக்கும் மாட்டு சாணத்தைக் கொண்டு இவர்கள் மின்சாரத்தை உருவாக்கி நெய் , எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு பயன்படுத்துகின்றனர். மின்சார உற்பத்தி அமைப்பை நிறுவ இவர்களுக்கு 66 லட்சம் ரூபாய் செலவானதாம். ஆனால் தற்போது 27 லட்சம் ரூபாய் மதிப்பிலேயே இந்த பயோ கேஸ் ஜெனரேட்டரை உருவாக்க முடியும் என அமன்ப்ரீத் சிங் கூறுகிறார்.
இதன் மூலம் இவர்களது நிறுவனம் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்துகிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியே இந்நிறுவனத்தின் புதிய மின்சார உற்பத்தி முறையை பாராட்டினார். தற்போது கௌ ஆர்கானிக்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4500 வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய பொருட்களை விற்பனை செய்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications