உலகின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றான அக்சன்சர் இந்தியாவில் சுமார் 50 நிறுவனங்களுடன் இணைந்து புதிய திட்டத்தைத் தீட்டி வருகிறது.
அக்சன்சர் தனது வாடிக்கையாளர்களுக்கு, புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய மாடல்களை உருவாக்குவதற்காக இப்புதிய முயற்சியை இந்தியாவில் துவங்கியுள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஸ்டார்ட்அப் திட்டம்
அமெரிக்க நிறுவனமான அக்சன்சர் 2 வருடங்களுக்கு முன்பு இன்னோவேஷன் புரோகிராம் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் வாயிலாக நிறுவனத்திற்கு இன்னோவேஷன்-ஐ ஸ்டார்ட்ப் நிறுவனங்களின் வாயிலாகக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கம்.
புதிய சேவை
கடந்த 2 வருடத்தில் இத்திட்டத்தை அமெரிக்கா மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுத் தற்போது open-innovation-as-a-service என்ற பிரத்தியேக சேவையை அக்சன்சர் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் துவங்கியுள்ளது.
சிலிக்கான் வேலி
இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய திட்டங்கள், புதிய ஐடியாக்களை நிஜத்தில் உருவாக்க இனியும் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை மட்டும் நம்பியிருக்கத் தேவையை இல்லை என்பது அக்சன்சர் நிறுவனத்தின் இப்புதிய முயற்சி அடித்தளமாக அமையும் எனத் தெரிகிறது.
திட்டத்தின் இயக்கம்..
சர்வதேச வாடிக்கையாளர்களுடன் இயங்கும் அக்சன்சர் அதிகத் தேவை மற்றும் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் ஆதிக்கத்தைக் கண்டறியும். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் 4 புதிய திட்டத்தை 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முன் வைப்போம்.
இத்திட்டத்தை யார் தேர்தெடுக்கிறார்களோ இந்த ஸ்டார்ட்அப் நிறுவனமே proof-of-concept தயாரிப்பு அல்லது திட்டத்தை முழுமையாகவோ தயாரிக்கும் வாய்ப்பைப் பெறும். இந்தத் திட்டம் முழுவதும் அக்சன்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என அக்சன்சர் வென்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் அவ்நீஷ் சபர்வால் தெரிவித்துள்ளார்.
வெற்றிபெற்ற திட்டம்..
திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம் செய்யும் முதற்கட்ட பணிகள் வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளித்தால், இத்திட்டத்தை உருவாக்குவதில் அக்சன்சர் முழுமையாக உதவி செய்யும்.
ஒரு வாடிக்கையாளர் இன்னோவேஷன் சென்டரை அமைக்கவேண்டும் என்றால் 1 வருடத்திற்கும் அதிகமான காலம் தேவைப்படும். ஆகவே இத்திட்டம் மிகப்பெரிய வெற்றித் திட்டமாக உள்ளது என்றும் அவ்நீஷ் கூறினார்.
5,00,000 டாலர்
டீப் டெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் அக்சன்சர் பணியாற்றுவதன் மூலம் தற்போது வருத்திற்கு 5,00,000 டாலர் வரையிலான வருமானத்தைப் பெறுகிறது.
வேலைவாய்ப்பு..
இந்தியாவில் இத்திட்டம் கொண்டு வருவதன் மூலம் திறன் படைத்த நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் பெற்ற முடியும். இதன் மூலம் திவாலாகும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவது மட்டும் அல்லாமல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
லாபம்
ஒரு விதத்தில் இத்திட்டம் அக்சன்சர் மற்றும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் லாபமாகவே உள்ளது.
1,500 நிறுவனங்கள்
அக்சன்சர் நிறுவனம் தற்போது 1,500 நிறுவனங்களைக் கண்காணித்து வருகிறது. இதில் 50 நிறுவனங்களுடன் மட்டுமே தற்போது முழு வீச்சில் இணைந்து செயல்படுகிறது.
இதில் சில நிறுவனங்களை முழுமையாகவும், சில நிறுவனங்களைத் திட்டங்களுக்காக மட்டும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications