கவர்ச்சியான நீச்சல் உடை தயாரிக்கும் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர்.. ஹீரோயின் டூ பிஸ்னஸ் வுமன்..!!

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான மானுஷி சில்லர் தற்போது தொழில்முனைவோராக மாறியுள்ளார். இன்று பிரபலங்கள் அனைவரும் தங்களுக்கென ஒரு நிலையான வர்த்தகத்தைப் பிற துறையில் தேடிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

மானுஷி சில்லர், 2017 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இவர், தற்போது திரைப்பட உலகிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

கவர்ச்சியான நீச்சல் உடை தயாரிக்கும் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர்.. ஹீரோயின் டூ பிஸ்னஸ் வுமன்..!!

திரைப்படத்திலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ பிரபலம் அடைந்துவிட்டால் போதும், அதை வைத்து ஏதாவது தொழிலைத் துவங்கிவிடுகிறார்கள். இது பலருக்குப் பெரிய அளவில் கைகொடுத்து வருகிறது, ஈகாமர்ஸ் துணையுடன் நாடு முழுவதும் வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றனர். சொல்லப்போனால் பல யூடியூபர்கள் இந்த பார்முலா-வை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி கண்டு வருகின்றனர்.

இதேபோல் மானுஷி சில்லர், ஸ்டைலிஸ்ட் ஷீபா ஜில்லானி என்பவருடன் இணைந்து, sustainability மையமாக கொண்ட பெண்களுக்கான நீச்சல் உடை (swimwear) தயாரித்து விற்பனை செய்யும் Dweep என்ற பிராண்டை உருவாக்கியுள்ளார்.

பாடி பாசிட்டிவிட்டி வலியுறுத்துபவர் நடிகை மானுஷி சில்லர். அவரது இந்த புதிய ஆடை நிறுவனத்தின் சுற்றுச்சூழல்-க்கு ஏதுவாக மற்றும் உடல் வகைகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றை இணைத்து ஃபேஷனுடன் கலந்து பெண்களுக்கான நீச்சல் உடை தயாரித்து வழங்குகிறது.

Dweep இணையதளத்தின் தகவல்படி, இந்தியப் பெண்களுக்கு sustainability மையமாக கொண்ட, வசதியான கடற்கரை ஆடைகள் கிடைப்பதில் இருந்த பற்றாக்குறையே தீர்க்கும் வகையில் மானுஷி சில்லர் மற்றும் ஷீபா ஜில்லானி ஆகியோரை Dweep என்ற பிராண்ட் பெயருடன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர்.

கவர்ச்சியான நீச்சல் உடை தயாரிக்கும் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர்.. ஹீரோயின் டூ பிஸ்னஸ் வுமன்..!!

Dweep நிறுவனம் பெண்களுக்கான இரண்டு வகையான ஆடைகளை வழங்குகிறது, நீச்சலுடை மற்றும் ரிசார்ட் உடைகள். இவற்றின் விலை ரூ.1500 முதல் ரூ.20,000 வரை இருக்கும்.

இந்த நீச்சலுடை ஸ்டார்ட்அப் நிறுவனம், அனைத்து உடல் வகைகள், சரும நிறங்கள் மற்றும் பர்சனல் ஸ்டைல்-க்கு ஏற்றவாறு உடை வடிவமைப்பை வழங்குவதன் மூலம் அதிகப்படியான மக்களுக்குப் பன்முகத்தன்மை கொண்ட ஆடைகளை வழங்க உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஆடைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

யார் இந்த மானுஷி சில்லர்?: 1997 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த மானுஷி சில்லர், மருத்துவம் படிப்பதற்கான கனவோடு இருந்தவர். காரணம் அவருடைய தாய் தந்தை இருவரும் மருத்துவர்கள் ஆவார். ஆனால், விதி அவருக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தது. படிப்பில் ஆர்வம் இருந்தாலும், மாடலிங் துறையில் அவர் கொண்டிருந்த ஆர்வம் அவரை அழகு போட்டிகளில் பங்கேற்க வழிவகுத்தது.

கவர்ச்சியான நீச்சல் உடை தயாரிக்கும் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர்.. ஹீரோயின் டூ பிஸ்னஸ் வுமன்..!!

2017 ஆம் ஆண்டு, பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற மானுஷி சில்லர், அதே ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலும் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகி பட்டத்தை வென்று அசத்தினார்.

உலக அழகி பட்டம் வென்ற பிறகு, பாலிவுட் திரைப்பட உலகில் நுழைந்தார் மானுஷி சில்லர். 2022 ஆம் ஆண்டு வெளியான Samrat Prithviraj என்ற வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்ட படத்தில் நடித்தார். பிரித்விராஜ் சௌஹான் மன்னரின் மனைவி சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். அக்ஷய குமார் இந்த படத்தில் பிரித்விராஜ் சௌஹான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை மானுஷி சில்லர் சமராட் பிருத்விராஜ், தி கிரேட் இந்தியன் ஃபேமிலி, ஆபரேஷன் வால்ண்டைன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மானுஷி சில்லர் தற்போது நடித்து வரும் படங்கள் பட்டியலில் நோ என்ட்ரி தொடர்ச்சி (No Entry Sequel), டெஹ்ரான் (Tehran) ஆகிய படங்கள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+