சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி நிறுவனங்கள் சியாபெங் மோட்டார்ஸ் எனப்படும் சீன எலக்ட்ரிக் கார் ஸ்டார்ட் அப் நிறுவனம் மீது 350 மில்லியன் அமெரிக்க டாலரினை முதலீடு செய்ய உள்ளனர்.
உலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில் அலிபாபா மற்றும் ஃபாக்ஸ்கான் எடுத்துள்ள முடிவுகள் எலக்ட்ரிக் கார் உற்பத்தித் துறையில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
முதலீடு
சியாபெங் மோட்டார்ஸ் நிறுவனம் 5 பில்லியன் யூயானை முதலீடாகப் பெற உள்ளதாகவும் அன்மையில் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது ஐடிஜி கேப்பிட்டல் உள்படப் பல நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றனர். முதலீடுகள் குறித்து அலிபாபா மற்றும் பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளும் உறிதி செய்துள்ளனர்.
டெஸ்லா
சீனாவில் டெஸ்லா நிறுவனம் விரைவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தினைத் துவங்க உள்ள நிலையில் சியாபெங் மோட்டார்ஸ் நிறுவனம் ஜி3 என்ற முதல் எலக்ட்ரிக் கார் மாடலினை 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.
நியோ
சியாபெங் மோட்டார்ஸ் மட்டும் இல்லாமல் சீனாவில் ஏற்கனவே டெஸ்லாவிற்கு இணையான கார் என்றும் அதை விடப் பாதி விலையில் கிடைக்கிறது நியோ es8 என்ற எஸ்யூவி கார் விற்பனையும் சூடு பிடித்து வருகிறது.
வருவாய்
இணையதள வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் அலிபாபா நிறுவனத்திற்கு இந்த நிறுவனத்தின் முதலீடு மூலமாகப் புதிய வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஹாங்ஜோ சார்ந்த இந்தக் குழுமம் எலக்ட்ரிக் காருக்காகப் புதிய இயங்குதளத்தினை அறிமுகம் செய்துள்ளது.
மகேந்திரா
இந்தியாவில் ஏற்கனவே மகேந்திரா நிறுவனம் சிரிய ரக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் விரைவில் சீடான் ரக எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.
டாடா
டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே நேனோ காரினை எலக்ட்ரிக் கார்களாக மாற்றும் பணிகளில் இறங்கியுள்ளது மட்டும் இல்லாமல் பிற எலக்ட்ரிக் கார் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சூசுகி
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி ஜப்பானின் சூசுகி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடப்பு ஆண்டில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களை அதிகக் கார்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications