எந்த வியாபாரம் செய்தாலும், அதனை வெற்றிகரமாக நடத்துவது கடினம், சவால் நிறைந்தது அல்லது முயற்சி நிறைந்தது. இந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா..?
உண்மையில் இப்படியொரு வாய்ப்பு உள்ளது பலருக்கும் தெரியாது. இது என்ன பிஸ்னஸ்..? இந்த பிஸ்னஸ்-ஐ அனைவராலும் செய்ய முடியுமா..? இதன் உண்மை நிலவரம் என்ன..? வாங்க பார்ப்போம்.
ஏடிஎம் பிஸ்னஸ் பிரான்சைஸ் பிஸ்னஸ்-ன் வழிமுறைகள் மற்றும் ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை ஈட்டுவது பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.
ஏடிஎம்-கள்
எஸ்.பி.ஐ. ஏடிஎம், ஐ.சி.ஐ.சி.ஐ. ஏடிஎம், ஹெச்.டி.எஃப்.சி. ஏடிஎம், பி.என்.பி. ஏடிஎம், யு.பி.ஐ. ஏடிஎம் என நாம் பரவலாக பயன்படுத்தி வரும் பெரும்பாலான ஏடிஎம்களை வங்கிகள் தான் நிர்வகித்து வருகின்றன என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை.
வங்கிகள்
வங்கிகள் இன்ஸ்டால் செய்திருக்கும் ஏடிஎம்கள் பெரும்பாலும் வங்கிகளால் வாடகைக்கோ அல்லது காண்டிராக்ட் முறையிலோ எடுக்கப்படுகின்றன. இதன் பின்பு தேர்வு செய்யப்படும் இடத்தில் வங்கிகள் ஏடிஎம்களை இன்ஸ்டால் செய்கின்றன.
கூட்டணி நிறுவனம்
பெரும்பாலான வங்கிகள் டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் அல்லது ஒன் ஏடிஎம் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஏடிஎம்களை இன்ஸ்டால் செய்கின்றன. நீங்கள் விரும்பும் வங்கிக்கு ஏடிஎம் பிரான்சைஸ் எடுக்க இந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ வலைத்தளம்
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை சரியாக கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏடிஎம் பிரான்சைஸ் வழங்குவதாக பல்வேறு போலி வலைத்தளங்கள் பல செயல்பட்டு வருகின்றன.
ஏடிஎம் பிரான்சைஸ் பெற அத்தியாவசியமானவை
ஏடிஎம் கேபின் ஒன்றை செட்டப் செய்ய குறைந்தபட்சம் 50 முதல் 80 சதுர அடி பரப்பளவு நிலம் வைத்திருப்பது அவசியம் ஆகும். இது குறைந்தபட்சம் மற்ற ஏடிஎம்களை விட 100 மீட்டர்கள் தொலைவில் இருப்பதும் அவசியம் ஆகும். இவற்றை மற்றவர்கள் எளிதில் பார்த்து படிக்கும்படியாக முக்கியமான இடத்தில் இருக்க வேண்டும். தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 1 கிலோவாட் மின்திறன் அவசியம் ஆகும்.
V-SAT அவசியம்
ஏடிஎம் கேபின் நிரந்தர கட்டிடமாக இருப்பதோடு கான்க்ரீட் ரூஃப் மற்றும் கட்டிட சுவர் இருக்க வேண்டும். V-SAT இன்ஸ்டால் செய்ய உங்களது சொசைட்டி அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் தடையின்மை சான்று (NOC) பெற வேண்டும்.
ஏடிஎம் பிரான்சைஸ் பெற தேவையான ஆவணங்கள்:
அடையாள சான்று: ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை
முகவரி சான்று: குடும்ப அட்டை, மின் கட்ட ரசீது
வங்கி கணக்கு மற்றும் வங்கி கணக்கு புத்தகம்
புகைப்படம், மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் நம்பர்
இதர ஆவணங்கள் / நிறுவனம் கோரும் இதர படிவங்கள்
ஜி.எஸ்.டி. எண்
நிறுவனம் கோரும் நிதி ஆவணங்கள்
மூலதனம்
விண்ணப்பித்து ஏடிஎம் பிரான்சைஸ்-க்கு அனுமதி பெறும் பட்சத்தில் பெரும்பாலான ஏடிஎம் பிரான்சைஸ்களுக்கு பாதுகாப்பு முன்பணமாக ரூ.2 லட்சமும், ரூ.3 லட்சம் மூலதனமாக செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த முதலீடு தொகையும் ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்ப வேறுபடும்.
ஏடிஎம் பிரான்சைஸ் வருமானம்:
ஏடிஎம் இன்ஸ்டால் செய்தபின் பொதுமக்கள் பயன்படுத்த துவங்கியதும், ஒவ்வொரு பண பரிவர்த்தனைகளுக்கும் ரூ.8, பண பரிவர்த்தனை இல்லாத பயன்பாடுகளான அக்கவுண்ட் இருப்பு நிலை, பண பரிமாற்றங்களுக்கு ரூ.2 வழங்கப்படும்.
குறிப்பு: இந்த செய்தி தொகுப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான புரிதலுக்கு மட்டுமே. இதனை நிதி ஆலோசனையாக கருதுவதற்கு அல்ல.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications