படமோ, சீரியலோ இவர் தயாரிச்சாவே ஹிட்டு தான்!! தமிழ் சினிமாவின் அடையாளம்!! யார் இந்த ஏவிஎம் சரவணன்?

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரை கேட்காமல் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்க முடியாது . அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்த ஒரு படம் தயாரிப்பு நிறுவனம்தான் ஏவிஎம்.

வழக்கமாக மக்கள் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்களை நினைவில் கொள்வார்கள். ஆனால் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மக்கள் மனதில் இடம் பிடித்தது என்றால் அது ஏவிஎம் புரொடெக்‌ஷன் நிறுவனம் தான். ஏவிஎம் தயாரித்த படம் என்றால் அது குடும்பத்துடன் பார்க்கும் படமாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்த நிறுவனம்.

படமோ, சீரியலோ இவர் தயாரிச்சாவே ஹிட்டு தான்!! தமிழ் சினிமாவின் அடையாளம்!! யார் இந்த ஏவிஎம் சரவணன்?

.தென்னிந்தியாவின் முக்கியமான திரைப்பட தயாரிப்பு நிறுவனம். 1945 ஆம் ஆண்டு ஏவி மெய்யப்பன் அப்போதைய மெட்ராஸில் வடபழனியில் தன்னுடைய முதல் ஸ்டுடியோவை நிறுவினார். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவின் அடையாளமாகவே ஏவிஎம் ஸ்டுடியோஸ் மாறியது. தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் 177 திரைப்படங்களை ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் , களத்தூர் கண்ணம்மாவில் கமலஹாசன் என பல்வேறு நடிகர்களையும் இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த நிறுவனம்தான் ஏவிஎம். ஏவிஎம் ஸ்டுடியோ புரொடக்‌ஷன் என்பது வெறும் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல, அதற்குள்ளேயே ஸ்டுடியோ இருக்கும், டப்பிங் தியேட்டர், பிரிவியூவ் தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைந்தது. அதாவது இந்த ஒரு இடத்திலேயே ஒரு முழு திரைப்படத்தையே நீங்கள் ஷூட்டிங் செய்து ரெக்கார்டிங் செய்து வெளியிடக்கூடிய அனைத்து வசதிகளும் நிறைந்தது.

படமோ, சீரியலோ இவர் தயாரிச்சாவே ஹிட்டு தான்!! தமிழ் சினிமாவின் அடையாளம்!! யார் இந்த ஏவிஎம் சரவணன்?

உலகிலேயே 5 ஸ்டூடியோக்கள் தான் தொடர்ச்சியாக 50 ஆண்டுகாலம் எந்தவித பிரேக்கும் இல்லாமல் செயல்பட்டவை. அதில் ஏவிஎம் ஸ்டுடியோஸும் ஒன்று என்பதுதான் என்பது இதன் பெருமை. 1950களில் இருந்தே திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பு ஏவிஎம் சரவணனிடம் வந்தது. சரவணன் சூர்யா மணி என்பது தான் இவர் பெயர் ஆனால் ஏவிஎம் சரவணன் என்றால் தான் இவரை அனைவருக்கும் தெரியும்.

ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை ஏவிஎம் சரவணனுக்கு தான் . 2007 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தான் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வெளியிட்டது. அதிலிருந்து தான் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும் பிரம்மாண்டமாக செலவு செய்து படங்களை வெளியிட முன் வந்தன. அந்த வகையில் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் வெளியிட்டுருக்கு முன்னோடியாக ஏவிஎம் சரவணன் தான் இருக்கிறார்.

படமோ, சீரியலோ இவர் தயாரிச்சாவே ஹிட்டு தான்!! தமிழ் சினிமாவின் அடையாளம்!! யார் இந்த ஏவிஎம் சரவணன்?

அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு முதன்முறையாக டால்பி சவுண்ட் டெக்னாலஜியில் சிவாஜி படத்தை வெளியிட்டு அந்த தொழில் நுட்பத்தை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமையும் ஏவிஎம் சரவணனுக்கு தான் உண்டு. இப்போது தான் யூடியூப் படங்களும், வெப்பில் நேரடியாக வெளியிடப்படும் படங்களும் வருகின்றன. ஆனால் ஏவிஎம் நிறுவனம் 2014 ஆம் ஆண்டிலேயே இதுவும் கடந்து போகும் என யூடியூபில் வெளியிடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்து அதற்கு முன்னோடியாக மாறியது.

ஏவி மெய்யப்பன் தலைமையில் ஏவிஎம் நிறுவனம் பாரம்பரியமாக திரைப்பட தயாரிப்பில் மட்டுமே இருந்தது. அதனை சின்னத்திரைக்கும் கொண்டு வந்தவர் ஏவிஎம் சரவணன். ஏவிஎம் நிறுவனத்தை 2004ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பிலும் கொண்டு வந்தார். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்த பல தொலைக்காட்சி சீரியல்களை ஏவிஎம் சரவணன் தயாரித்தார்.

தங்களின் ஏவிஎம் ஸ்டூடியோஸ் கதவை சீரியல் படப்பிடிக்கு திறந்து வைத்து வருமானத்தை பெருக்கியவர். கால மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்து கொண்டு தொழிலை நடத்தியவர். ஏவிஎம் படம் என்றால் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்தவர். 2014க்கு பிறகு இந்த நிறுவனம் பெரிய அளவில் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இந்த நிறுவனம் தொடக்க முதல் தற்போது வரையிலான சினிமா உலகின் மாற்றங்களை தன்னகத்தை சுமந்து கொண்டிருக்கிறது.

அதற்கு ஏற்ப ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என்ற ஒரு மியூசியத்தையும் உருவாக்கி இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மியூசியத்தை திறந்து வைத்தார். தமிழ் சினிமாவின் வரலாறே இதில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.ஏவிஎம் சரவணன் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர். வயதுமூப்பு காரணமாக இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. நேற்று தான் இவர் 85ஆவது பிறந்தநாளை கொண்டாடினார், இன்று காலமாகிவிட்டார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+