பெங்களூர் விமான நிலைய டாக்சி.. புரட்சியை ஏற்படுத்தும் Go Pool ஷேரிங் டாக்சி..!

பெங்களூரை சேர்ந்த டெக்கியான ஆகாஷ் ஜாதவ் கடந்த ஆண்டு விமானத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சக பயணி தான் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு போக வேண்டும் எனக் கூறுவதைக் கேட்டார்.எலக்ட்ரானிக் சிட்டி விமான நிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ளது. ஆகாஷ் ஜாதவ் செல்லும் வழியில் அந்தப் பயணியின் இடம் இருந்தது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் தங்களது லக்கேஜ்களை ஜாதவ்வும் அந்தப் பயணியும் சேகரித்துக் கொண்டனர். அப்போது அந்த பயணியிடம் சென்ற ஜாதவ், அவர் தவறாக நினைக்காவிட்டால் தன்னுடன் ஊபர் பயணக்கட்டணத்தை பகிர்ந்து கொண்டால் இருவரும் சேர்ந்து செல்லலாமா என்று கேட்டுள்ளார்.

பெங்களூர் விமான நிலைய டாக்சி.. புரட்சியை ஏற்படுத்தும் Go Pool ஷேரிங் டாக்சி..!

அதற்கு அந்தப் பயணி ஒப்புக் கொண்டார், அந்தப் பயணி ஒரு பெண். முன்பின் தெரியாத தன்னுடன் வருவதற்கு அவர் தயாரா என்று ஜாதவ் கேட்டதற்கு பெரும்பாலான விமான நிலையங்களில் இதுபோன்ற ஷேர் செய்து சென்றுள்ளதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் அந்தப் பயணத்தை செய்து கட்டணத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்த அனுபவம் ஆகாஷ் ஜாதவுக்கு ஒரு யோசனயை தந்தது. அது பற்றி மேலும் ஆராய்ந்தபோது பெரும்பாலான நகரங்களில் விமான நிலையங்கள் வெகு தொலைவில் அமைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் விமான நிலையத்துக்குச் சென்று வர அதிகளவு கேப் கட்டணம் இருந்தது. பெரும்பான்மையான பயணிகள் தங்களது பயணச் செலவை மிச்சப்படுத்தவே நினைக்கின்றனர்.

இதுதான் ஆகாஷ் ஜாதவ்வை இறுதியா 'கோ பூல்' நிறுவனத்தைத் தொடங்க வைத்தது. கோ பூல் மூலம் பயணிகள் தங்களுக்கு ஒரு துணையைத் தேடிக் கொள்ள முடியும். இதன் மூலம் பயணக் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளலாம். பணம் மிச்சமாகும். இரு பயணிகள் கட்டணத்தை மிச்சப்படுத்துவது சாத்தியமாக இருந்தது. இதற்கும் கேப் ஆப்பரேட்டர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கோ பூல் பிளாட்பார்மை 2023 பிப்ரபரியில் ஆகாஷ் ஜாதவ் ஆரம்பித்தார். அப்போது அவர் வேறு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு ஆண்டு கழிந்த பின்னர் அவர் தனது வேலையை விட்டுவிட்டு தனது நிறுவனத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கார் பூலிங் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஆரம்பித்தார். அவரது முயற்சிக்கு விரைவிலேயே பலன் கிடைத்தது. கோ பூல் இப்போது பெங்களூரு, ஹைதராபாத், கோவா, புணே ஆகிய நகரங்களில் செயல்படுகிறது.

கோ பூலுக்கு 25,000 யூசர்கள் உள்ளனர். தினமும் இந்த ஆப்பை பயன்படுத்தி 50 முதல் 125 பேர் பயணிக்கின்றனர். பெங்களூரில் கோ பூல் ஐடியா சூப்பராக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. 36 வயதான ஆகாஷ் ஜாதவ் புணே எம்ஐடியில் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
சாப்ட்வேர் துறையில் 13 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றுள்ளார்.

கோ பூலுக்கு முன்பாக ஆறு ஐடியாக்களை முயற்சித்தேன். அத்தனையும் தோல்வியடைந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக கோ பூல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே எனது வேலையைக் கூட விட்டுவிட்டு இந்த ஐடியாவை சிறப்பாக நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டேன் என்கிறார் ஜாதவ். கோ பூல் தளத்தை நடத்த தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1.5 லட்சம் செலவிட்டுள்ளார். சர்வர் பில், ஓடிபி சர்வீஸஸ், பிசினஸ் ரெஜிஸ்டிரேஷன், மார்க்கெடிங் செலவுகள் மற்றும் இன்பிளுயன்ஸர்களுக்கும் இதை செலவிட்டார்.
இந்த ஆப் மற்றும் வெப்சைட்டை உருவாக்க எந்த செலவும் செய்யவில்லை. ஏனென்றால் அவற்றை நானே உருவாக்கினேன்.

டிசம்பருக்குள் ரூ.10 லட்சம் முதலீடு செய்ய உள்ளேன். கோ பூலை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக உயர்த்தி இன்னும் பல நகரங்கள் மற்றும் உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகிறேன். இதில் முதலீடு செய்வதற்கு பலர் முன்வந்துள்ளனர். இருந்தாலும் அது போதாது. ஒருவேளை கணிசமாக வந்தால் அது பற்றி யோசிப்பேன் என்று ஜாதவ் கூறினார்.

வருமானம் பற்றி அவர் கூறுகையில், இப்போது வரை கோ பூல் வருமானத்துக்கு முந்தைய நிலையில்தான் உள்ளது. அதை ஒரு பிசினஸ் மாடலாக உருவாக்குவேன். இதுவரை கோ பூலில் இருந்து எந்த வருமானத்தையும் பெறவில்லை. அந்த சேவையை இலவசமாக அளித்து வருகிறேன். இந்த ஐடியா வெற்றி பெறும்வரை காத்திருக்க வேண்டும். பயணக் கட்டணத்தை பயணிகள் இடையே பகிர்ந்து கொள்கின்றனர்.

கோ பூலுக்கு சம்பந்தமில்லை. கோ பூலுடன் கனெக்ட் செய்தால் எந்த கேப்பை தேர்வு செய்ய வேண்டும், எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்பது பற்றி மட்டும் தேர்வு செய்யலாம். அத்துடன் கோ பூல் வேலை முடிந்து விடும். இனி ஏதாவது கேப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கமிஷன் அடிப்படையில் சேவையை தொடர்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஜாதவ் கூறினார்.

கோ பூல் மூலம் பயணிப்பவர்களின் ஆதார் விவரங்கள் சரி பார்க்கப்படும். அத்துடன் அவர்களது லிங்க்டின் புரொபைலையும் செக் செய்யலாம். இதன் மூலம் அவரது தொழில் பின்னணியும் தெரியும். இது பயணிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்படும் நடைமுறையாகும்.

அத்துடன் தனியாக பயணிக்கும் பெண்கள், அகால நேரத்தில் செல்லும் பெண்கள் இந்த ஆப்பில் ஃபில்டர்களை பயன்படுத்தி பெண் துணைகளை தேர்வு செய்யலாம். ஆண்களை தவிர்க்கலாம் என்று ஜாதவ் கூறுகிறார்.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+