வங்கிகள் 42 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 1.63 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உறுதித் திட்டத்தின் கீழ் வங்கிகள் 1.63 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கியுள்ளதாகவும், எவ்வாறயினும் செப்டம்பர் 10 வரை இதில் 1.18 லட்சம் கோடி ரூபாய் கடன் 25 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா லாக்டவுன்
இது கொரோனா பாதிப்பால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன. இது கொரோனா தொற்று நோயினை கட்டுப்படுத்த அரசு நாடு முழுவதும் லாக்டவுனை அமல்படுத்தியிருந்தது. இதனால் மூலதனம் இல்லாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தொழில்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனை தொடர்ந்து தொழிற்துறையினைர ஊக்குவிக்கும் விதமாக அரசு இப்படி ஓரு அறிவிப்பினைக் கொடுத்தது.
இது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்கத்தொகையின் கீழ் கடன் உறுதித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடன்
இந்த திட்டத்தின் மூலம் தான் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி வரை பொதுத்துறை வங்கிகளும், 23 தனியார் துறை வங்கிகளும் 1,63,226.49 கோடி ரூபாய் கடன் தொகையை 42,01,576 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒப்புதல்
இதில் ஆத்மா நிர்பார்பாரத் அபியான் திட்டத்தின் கீழ் 25,01,999 நிறுவனங்களுக்கு ரூ.1,18,138.64 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு வங்கிகள் தற்போது 4367 கோடி ரூபாய் ஒப்புதல் / பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
MSME உதவும் திட்டம்
அரசின் இந்த திட்டமானது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளது. உண்மையில் கொரோனாவினால் துவண்டு போன நிறுவனங்களுக்கு மத்தியில், இந்த கடன் திட்டமானது நிச்சயம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உயிர்கொடுக்கும் விதமாக வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனை வழங்கும் திட்டத்தினை அறிவித்திருந்தது நினைவு கூறக்தக்கது.


Click it and Unblock the Notifications